twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்த ஒரே நடிகர் நான் தான்: கமல்

    By Siva
    |

    சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்த ஒரே நடிகர் நான் தான் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பல பிரச்சனைகளைத் தாண்டி படம் ரிலீஸானது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்திற்கும் எதிர்ப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் விஸ்வரூபம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் பிரச்சனை வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கமல் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.

    குற்றம் சுமத்துவது அபத்தம்

    குற்றம் சுமத்துவது அபத்தம்

    விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு கிளம்பினால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்துள்ளீர்கள். கன்னட கவிஞர் அனந்தமூர்த்தியோ மோடி பிரதமர் ஆனால் நான் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று கூறியுள்ளார். கலைஞர்கள் இப்படி எல்லாம் முடிவு எடுக்கலாமா என்று கமலிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் கூறுகையில், அனந்தமூர்த்தியை மதிக்கிறேன். அவரது கருத்தோ அரசியல் சார்ந்தது. ஆனால் என் கருத்தோ தனிப்பட்ட ஒன்று. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் எனக்கு சிக்கல் ஏற்பட்டது. எனது விமர்சகர்கள் வெளியில் இருந்து வந்தனர். அவர்கள் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகள் அன்று. ஏனென்றால் பெரும்பான்மையினர் என் படங்களை பார்க்கின்றனர். முன்னதாக நான் யார் பக்கம் இருந்தேனோ அந்த சகோதரர்களே எதிர்ப்பு தெரிவித்தது தான் என்னை வேதனைப்படுத்தியது. எனக்கு அரசியல் எல்லாம் கிடையாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்த ஒரே நடிகர் நான் தான். என் மீது குற்றம்சாட்டுவது அபத்தம் என்றார்.

    பாராட்டிவிட்டு தடை

    பாராட்டிவிட்டு தடை

    விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பாளர்களுக்கு போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்து பாராட்டி கை குலுக்கினர். மறுநாள் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள் என்றார் கமல்.

    வெளியேறுவேன்

    வெளியேறுவேன்

    விஸ்வரூபம் போன்று விஸ்வரூபம் 2 படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டால் வெளி மாநிலம் அல்லது வெளி நாட்டுக்கு சென்றுவிடுவேன். இது ஒன்றும் மிரட்டல் இல்லை. எனது ராஜினாமா ஆகும். இது தனிப்பட்ட சோகம். இது என் நாடு என்று கருதுகிறேன். இங்கிருந்து வெளியேறி படங்கள் எடுத்தாலும் எதிர்ப்பு வரும். கலாச்சார சென்டிமென்ட் மாறாது என்று கமல் தெரிவித்தார்.

    சினிமா சுதந்திரமாக இருக்கட்டும்

    சினிமா சுதந்திரமாக இருக்கட்டும்

    சினிமா சுதந்திரமாக செயல்பட வேண்டும். இங்கு சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் ஒப்பிட்டால் நம் சினிமா துறை பின் தாங்கி தானே உள்ளது. நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கமல் கூறினார்.

    டிடிஹெச்சுக்கு

    டிடிஹெச்சுக்கு

    விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிடுவேன் என்று தெரிவித்தார் கமல். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, வீடியோ வந்தபோது கூட எதிர்ப்பு கிளம்பியது. டிடிஹெச்சை தொழில்நுட்பமே நிறைவேற்றும். அது வரை காத்துக் கொண்டிருப்பேன் என்றார் கமல்.

    அரசியல்

    அரசியல்

    2014ம் ஆண்டில் அரசியலுக்கு வருவீர்களா என்று கமலிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், எனக்கு தேவை பார்வையாளர்களே தவிர வாக்காளர்கள் இல்லை. நான் எப்பொழுதுமே வித்தியாசமானவற்றை செய்வேன். அனுபவம் இல்லாத துறையில் நான் ஏன் நுழைய வேண்டும் என்றார்.

    English summary
    Kamal Hassan told that he is only actor who raised his voice against Babri Masjid demolition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X