»   »  கடவுளைக் கண்டால் கை குலுக்குவேன்... அப்புறம் கேள்வி கேட்பேன்: கமல்

கடவுளைக் கண்டால் கை குலுக்குவேன்... அப்புறம் கேள்வி கேட்பேன்: கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கைகுலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அப்புறம் அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்.

நடிகர் கமல் நேற்று தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது பிறந்தநாளையொட்டி, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணனை நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கினார்.

மாலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட கமல், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை வழங்கினார்.

இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், கவிஞர் புவியரசு, எழுத்தாளர் சுகா, அகில இந்திய கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் கமல் சகிப்புத்தன்மை குறித்த விமர்சனம், மாட்டுக்கறி சாப்பிடுவது, அரசியல் பிரவேசம் என பலவற்றைப் பற்றி ஆவேசமாகப் பேசினார். எப்போதுமே கமலின் படங்கள் குறித்த விமர்சத்தில் அவரது நாத்திகத்தன்மை குறித்துக் கட்டாயம் பேசப்படும். இல்லனு சொல்லலை, இருந்திருந்தா நல்லாயிருக்கும்னு தான் சொன்னேன் என அவரது வசனங்களே அதற்கு உதாரணங்கள்.

இந்நிலையில், நேற்று பிறந்தநாள் விழா மேடையிலும் தனது கடவுள் நம்பிக்கை குறித்துப் பேசினார் கமல். அப்போது அவர் பேசியதாவது:-

சாமி சிலை பயன்தராது...

சாமி சிலை பயன்தராது...

நாம் வருடந்தோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன்படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும்.

இது தான் என் பகுத்தறிவு...

இது தான் என் பகுத்தறிவு...

எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது.

காலாவதி உண்டு...

காலாவதி உண்டு...

தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது.

இது கிண்டல் அல்ல...

இது கிண்டல் அல்ல...

ஒருவன் வழிபாட்டு ஸ்தலத்தில் மது அருந்திக்கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்.

பாக்கெட்டில் இருக்கட்டும்...

பாக்கெட்டில் இருக்கட்டும்...

என் பகுத்தறிவை கேலி செய்கிறார்கள். சொர்க்கம், நரகம் இரண்டையும் இந்த பூமியிலேயே அனுபவிக்காமல் போகமாட்டேன். தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட்டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.

பகுத்தறிவாளன்...

பகுத்தறிவாளன்...

என் சகிப்புத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன்.

கை குலுக்குவேன்... கும்பிட மாட்டேன்

கை குலுக்குவேன்... கும்பிட மாட்டேன்

மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கைக்குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன்.

எங்கே இருந்தீர்கள்...

எங்கே இருந்தீர்கள்...

அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஏழ்மை வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஆண்-பெண் என்ற பாலினம் உங்களுக்கு தேவையா?, வடமொழியில் மட்டும்தான் பேசமுடியுமா?, எனது தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் கேட்பேன்' என இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Kamal has said that he will questions god, if he appears in front of him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil