»   »  இப்போ மட்டுமில்ல எப்பவுமே நான் அரசியலுக்கு வரமாட்டேன்... சொல்வது உதயநிதி

இப்போ மட்டுமில்ல எப்பவுமே நான் அரசியலுக்கு வரமாட்டேன்... சொல்வது உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை என்று நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் திமுக பொருளாளர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

வாரிசு அரசியல் தவிர்க்க முடியாதது. இந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவில் சீட் கேட்டு பல அரசியல் வாரிசுகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். மூத்த தலைவர் துரைமுருகன் தமது மகன் கதிர் ஆனந்த், திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் மகன் செந்தில் ஆகியோர் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து விருப்பமனு கொடுத்துள்ளனர்.

I will never enter into politics, says Udayanidhi Stalin

தூத்துக்குடி பெரியசாமி மகன் ஜெகன், கோவை பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், ராமநாதபுரம் சுப. தங்கவேலன் மகன் சுப.த.சம்பத், எ.வ.வேலு தனது மகன் கம்பன் ஆகியோரும் விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பமனு கொடுத்திருக்கிறார். அதேபோல உதயநிதி ஸ்டாலினுக்காக அவரது ஆதரவாளர்கள் விருப்பமனு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இதனை உதயநிதி மறுத்துள்ளார். "எனக்கும் அரசியலுக்கும் முதலில் சம்பந்தமில்லை. நான் பேசாமல் படங்கள் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு என போய்க் கொண்டிருக்கிறேன். தேர்தலில் நிற்கும் எண்ணம் இந்த தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் இல்லை என்று கூறியுள்ளார்.

கட்சிக்கு உழைத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் சீட் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். நான் சீட் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. ஒரு தொகுதியில் இவர் நிற்க வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதே போல என் பெயரில் யாராவது விண்ணப்பித்திருக்கலாம், அதற்கும் எனக்கு சம்பந்தமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று கவிதை ஒன்று வெளியிட்டேன். அதில் இருந்து தான் நான் அரசியலுக்கு வரவிருக்கிறேன் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது" என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
Udayanidhi Stalin has said that he will never enter into politics as his father Stalin did.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil