»   »  தேசிய விருது கிடைத்தால் சினிமாவில் இருந்து ஓய்வு: ஷாருக்கான்

தேசிய விருது கிடைத்தால் சினிமாவில் இருந்து ஓய்வு: ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு தேசிய விருது கிடைத்த வேகத்தில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக்கான் நடித்து முடித்துள்ள படம் ஃபேன். அந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளாராம். மனீஷ் ஷர்மா இயக்கியுள்ள ஃபேன் படத்தின் டீஸரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஃபேன் படத்திற்காக பல விருதுகளை அள்ளுவீர்களா என்று ஷாருக்கிடம் கேட்டதற்கு அவர் சிரித்துக் கொண்டே கூறுகையில்,

தேசிய விருது

தேசிய விருது

நான் தேசிய விருதுக்காக காத்திருக்கிறேன். எனக்கு தேசிய விருது கிடைத்துவிட்டால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஃபேன் படத்தில் 24 வயது வாலிபராக நடித்தது மிகவும் சவாலாக இருந்தது. மேக்கப்பிற்கு மட்டும் 4 மணிநேரம் ஆனது. படத்தில் வரும் கதாபாத்திரம் என் வாழ்க்கையோடு ஒத்துப் போகிறது.

டெல்லி

டெல்லி

ஃபேன் படத்தில் கௌரவுக்கு பிடித்த ஹீரோ அவரைப் போன்றே டெல்லியைச் சேர்ந்தவர். அதனால் அந்த ஹீரோவை போன்று தானும் ஒரு நாள் பெரிய ஆளாகலாம் என்று நம்புகிறார்.

நானும் தான்

நானும் தான்

வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்காரர்களாக நடிப்பது எனக்கு பிடிக்காது. டெல்லியைச் சேர்ந்த நான் அந்த ஊர்க்காரனாக நடித்துள்ளதில் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு டெல்லி பாஷை மறந்துவிட்டது. ஆனால் இந்த படத்திற்காக டெல்லி பாஷை பேசியதில் மகிழ்ச்சி.

English summary
Shah Rukh Khan jokingly said, “I am just waiting for the National award as I have decided to retire after getting one.”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil