»   »  ஜோதிகா சொன்னதுக்கப்புறம் இன்னும் பொறுப்பா நடந்துக்க முயற்சிக்கிறேன்! - சூர்யா

ஜோதிகா சொன்னதுக்கப்புறம் இன்னும் பொறுப்பா நடந்துக்க முயற்சிக்கிறேன்! - சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிகா பேசியதைக் கேட்ட பிறகு இன்னும் பொறுப்பா நடந்துக்க முயற்சிக்கிறேன். என்னை இன்னும் சரி செய்து கொள்வேன், என நடிகர் சூர்யா பேசினார்.

மகளிர் மட்டும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா கூறுகையில், "ஜோதிகா பேசிய பிறகு நான் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால், தயாரிப்பாளர் என்கிற முறையில் பேசிவிடுகிறேன்.


I will try to become more responsible after heard Jyothika's speech - Surya

'36 வயதினிலே' படத்துக்குப் பிறகு எதிர்பார்த்த மாதிரி கதைகள் அமையவில்லை. அடுத்ததாக ஒரு பெரிய நடிகரோடு படம் செய்திருக்கலாம். ஆனால் இயக்குநர் பிரம்மா பெண்களை முன்னிலைப்படுத்தி கதையை உருவாக்கி கொண்டு வந்தார்.


இப்போது ஜோதிகா பேசிய பிறகு நானும் எவ்வளவு பொறுப்போடு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் எப்படி சரி செய்து கொள்ள முடியுமோ, செய்வேன்.


பொழுதுபோக்கிற்காக நிறைய படங்கள் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல புத்தகம், நல்ல பேச்சு, நல்ல உரையாடல் என அனைத்துமே வாழ்க்கையை ஊக்குவிக்கும். நான் நடிக்கும் படங்களை விட, தயாரிக்கும் படங்களை சமூக பொறுப்போடு தயாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இயக்குநர் பிரம்மா சொன்னது போல 'மகளிர் மட்டும்' படம், பெண்களைக் கொண்டாடும் படமாக இருக்கும்​," என்றார்.

English summary
Actor Surya says that he would try to become more responsible person, after heard Jyothika's speech at Magalir Mattum audio launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil