»   »  'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கக் காத்திருக்கிறேன்- சூர்யா

'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கக் காத்திருக்கிறேன்- சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் விருப்பம் தெரிவித்தால் அவருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

சூர்யா நடிப்பில் உருவான '24' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


டைம் டிராவல் கதை என்றாலும் விக்ரம் குமார் தங்களைக் குழப்பவில்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


24

24

டைம் டிராவலை மையமாகக்கொண்டு நேற்று முன்தினம் வெளியான படம் '24'. சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதன்முறையாக சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சூர்யாவின் ஹீரோ கதாபாத்திரத்தை விட அவரின் வில்லன் கதாபாத்திரமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


பிரீமியர் ஷோ

பிரீமியர் ஷோ

இப்படத்தின் அமெரிக்க பிரீமியர் ஷோவில் சூர்யா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு படம் பார்த்தார். படம் முடிந்த பின் ரசிகர்கள் சூர்யாவிடம் உரையாடினர். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சூர்யா சுவாரஸ்யமாக பதிலளிக்க, அதில் ஒரு ரசிகர் அஜீத்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.


தல சொன்னா

தல சொன்னா

இதற்கு சூர்யா 'தல சொல்லிட்டார்னா பண்ணிடலாம்' என்று பதில் கூறியிருக்கிறார். சூர்யாவின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அஜீத் ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். சூர்யா-அஜீத் இதுவரை இணைந்து நடித்ததில்லை என்பதால் இந்தக் கூட்டணியை இணைக்கும் முயற்சிகளில் தயாரிப்பாளர்கள் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


அஜீத் ரசிகர்கள்

அஜீத் ரசிகர்கள்

சூர்யாவின் '24' படத்திற்கு அவரது ரசிகர்கள் 80 அடியில் பிரமாண்ட கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைத்து அப்படத்தை வரவேற்றனர். அதே நேரம் அஜீத் ரசிகர்களும் இப்படத்திற்கு பேனர்கள் வைத்து தங்கள் வாழ்த்துகளையும் ஆதரவையும் '24' படத்திற்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


English summary
'I wish to Acting Along with Ajith' Surya says in 24 Premiere Show Function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil