»   »  கெளதமி, சுப்புலட்சுமியின் சவுகரியமும், சந்தோஷமுமே முக்கியம்.. மனம் திறந்தார் கமல்

கெளதமி, சுப்புலட்சுமியின் சவுகரியமும், சந்தோஷமுமே முக்கியம்.. மனம் திறந்தார் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுதமியை பிரிந்தது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் மனம் திறந்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலை பிரிவதாக கவுதமி ட்விட்டரில் அறிவித்தார்.

இது குறித்து கமல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கவுதமி

கவுதமி

கவுதமிக்கு எது நிம்மதியை அளித்தாலும் எனக்கு சரி. தற்போது என்னுடைய உணர்ச்சிகள் முக்கியம் இல்லை. கவுதமி மற்றும் சுப்பு சவுகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டியது தான் முக்கியம்.

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்கு எப்பொழுது எது தேவைப்பட்டாலும் நான் இருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

மகள்கள்

மகள்கள்

எனக்கு ஸ்ருதி, அக்ஷரா மற்றும் சுப்புலட்சுமி என 3 மகள்கள் உள்ளனர். இந்த உலகிலேயே நான் தான் மிகவும் அதிர்ஷ்டக்கார தந்தை என்று நினைக்கிறேன் என்றார் கமல்.

புற்றுநோய்

புற்றுநோய்

கவுதமிக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கமல் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அண்மையில் கமல் கீழே விழுந்து காலில் அடிப்பட்டபோது கவுதமி அவருக்கு ஆதரவாக இருந்தார். ஒருத்தருக்கொருத்தர் உதவியாக இருந்த நிலையில் பிரிந்துவிட்டனர்.

English summary
Though Gautami has left Kamal Haasan, he wants her to know that he is always there for her and Subbulakshmi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil