தமிழ்நாட்டில் தனுஷ் தான் டாப்.. காந்தாராவை விட இட்லி கடை அதிக வசூல்.. ஆனால், இன்பநிதிக்கு லாபமா?

சென்னை: தனுஷின் குபேரா படம் தெலுங்கில் வசூல் செய்த அளவுக்கு இட்லி கடை படம் தமிழ்நாட்டில் இன்னமும் பெரிதாக வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இட்லி கடை படம் தமிழ்நாட்டில் காந்தாரா சாப்டர் 1 படத்தை விட தொடர்ந்து அதிகளவிலேயே வசூல் ஈட்டி வருவது ஆறுதல் என்றாலும், சிவகார்த்திகேயனின் மதராஸி வசூல் அளவுக்கு படம் இல்லை என்பது வருத்தம் தான் என்கின்றனர்.

இந்த ஆண்டு வெளியான படங்களில் டிராகன் திரைப்படம் 150 கோடி வசூலை கடந்து பிளாக்பஸ்டர் ஆனது. விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 90 கோடி வரை வசூல் ஈட்டியது.

idli Kadai beats Kantara Chapter 1 in Tamil Nadu but Box office wise very dull
Photo Credit:

அஜித் குமாரின் ஃபிளாப்பான விடாமுயற்சி திரைப்படமும் 100 கோடி வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் மதராஸி படமும் 100 கோடி வசூல் செய்தது. ஆனால், இட்லி கடை போகிற வேகத்தை பார்த்தால் 100 கோடி வசூல் செய்வது ரொம்பவே கஷ்டம் தான் என்கின்றனர்.

காந்தாராவை விட டாப்: தனுஷின் இட்லி கடை படம் காந்தாரா சாப்டர் 1 படத்தை விட தமிழ்நாட்டில் குறைவான வசூலையே ஈட்டும் என ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காந்தாரா சாப்டர் 1 படத்தை விட கடந்த 2 நாட்களாக அதிக வசூலை ஈட்டியிருக்கிறது. சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் தனுஷின் இட்லி கடை படத்துக்கும் அதிகளவில் தியேட்டர்கள் அரங்கு நிறைந்து காணப்படுகின்றன. காந்தாரா படமும் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்ஃபுல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இது போதுமா?: இன்பன் உதயநிதி வழங்க தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் 2 நாட்களில் 26 கோடி வசூலை ஈட்டியுள்ளது. ஆனால், சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 2 நாட்களில் 50 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ போஸ்டரே வெளியானது. இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பு ஏதும் வரவில்லையே என்று தனுஷ் ஹேட்டர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து தனுஷ் படங்களில் நடித்து ரிலீஸ் செய்தாலும் பாக்ஸ் ஆபீஸில் தனுஷ் பெரிய இடத்தை பிடிக்காமல் இருக்கிறார் என்றும் இட்லி கடை 100 கோடி வசூல் செய்வது கஷ்டம் தான் என்றும் கூறுகின்றனர். காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து 200 கோடி வசூலை நோக்கி சென்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X