Idly Kadai Day 1 Box Office: இட்லி கடை முதல் நாள் வசூல்.. சிவகார்த்திகேயனின் மதராஸியை முந்தவில்லை!
சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் இன்று வெளியான நிலையில், இதுவரை அந்த படத்தின் வசூல் எந்தளவுக்கு வந்துள்ளது என்பது தொடர்பான தகவல்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கசிந்துள்ளன. நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் அவர் இயக்கி நடித்த ராயன் படத்தின் முதல் நாள் வசூல் அளவுக்கு கூட வராது என்றும் அதே போல இந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் முதல் நாள் வசூலை முறியடிப்பது கூட சிரமம் தான் என்றும் கூறுகின்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான தனுஷின் இட்லி கடை படத்துக்கு பெரிதாக டிக்கெட் புக்கிங் நடைபெறவில்லை. அதற்கு முக்கிய காரணமாக கரூரில் நடந்த துயர சம்பவம் தான் என்றும் மக்கள் இன்னும் இயல்பு மனநிலைக்கு திரும்பாத நிலையில், இந்த வாரம் வெளியாகும் படங்களின் வசூல் பாதிக்கும் என்றும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இட்லி கடை படம் இன்று வெளியான நிலையில், அந்த படத்துக்கு அதிகளவிலான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், நாளை முதல் டிக்கெட் புக்கிங் சூடு பிடித்தால் கூட தசரா விடுமுறையான 5 நாள் வசூலை இட்லி கடை அள்ளிவிடும் என்கின்றனர்.
இட்லி கடை முதல் நாள் வசூல்: தனுஷ் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், பார்த்திபன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இட்லி கடை படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை இட்லி கடை படத்தின் வசூல் அதிகபட்சமாக 10.40 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது.

ராயன், குபேரா முதல் நாள் வசூல்: தனுஷ் இயக்கி நடித்து கடந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்தது. அதிகபட்சமாக முதல் நாளில் 13.70 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா முதல் நாளில் 4.5 கோடி மட்டுமே தமிழ்நாட்டில் வசூல் செய்தது. ஆனால், இட்லி கடை படம் குபேரா படத்தை விட அதிக வசூலை ஈட்டியுள்ளது.
மதராஸியை முந்தவில்லை?: சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் கடந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. முதல் நாளில் அந்த படம் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 13.65 கோடி வசூலை ஈட்டியது. ஆனால், மதராஸி படத்தின் முதல் நாள் வசூலை இட்லி கடை முதல் நாளில் முந்துவது கடினம் தான் என்றும் அதிகபட்சமாக 10.40 கோடி வரை தான் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தாரா சாப்டர் 1 ப்ரீமியர் வேறு: இன்று இரவே பல திரையரங்குகளில் காந்தாரா சாப்டர் 1 படத்தையும் தமிழ்நாட்டிலும் வெளியிடும் நிலையில், தனுஷின் இட்லி கடை படத்தின் வசூல் மேலும் பாதிக்கும் என தெரிகிறது. ஆனாலும், தனுஷின் இட்லி கடை படத்துக்கு தொடர் விடுமுறை இருப்பதால் படம் நல்ல கலெக்ஷனை முதல் வார முடிவில் அள்ளும் என்றே கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











