»   »  'அவர்' ஹீரோவாக நடித்தால் நான் வில்லனாக ரெடி: கார்த்தி

'அவர்' ஹீரோவாக நடித்தால் நான் வில்லனாக ரெடி: கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அண்ணன் சூர்யா ஹீரோவாக நடித்தால் நான் வில்லனாக நடிக்க ரெடி என கார்த்தி தெரிவித்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த காஷ்மோரா படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. படம் தமிழில் மட்டும் அல்ல தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் காஷ்மோரா சக்சஸ் மீட் நடைபெற்றது.

காஷ்மோரா

காஷ்மோரா

காஷ்மோரா படம் தெலுங்கில் வெளியான ஏழு நாட்களில் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் கார்த்தி பிரபலமாகியுள்ளதையே இது காட்டுகிறது.

ராஜ்நாயக்

ராஜ்நாயக்

காஷ்மோரா வழக்கமான படம் அல்ல. இது நடிப்புக்கு அதிக ஸ்கோப் உள்ள படம். வரலாற்று காட்சிகள் மற்றும் ராஜ்நாயக்கின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என சக்சஸ் மீட்டில் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சூர்யா

சூர்யா

அண்ணய்யா(அண்ணன்) சூர்யாவுக்கு என் படம் மிகவும் பிடித்துள்ளது. தியேட்டரில் படத்தை பார்த்த அவர் இடைவேளை வரை விழுந்து விழுந்து சிரித்தாராம். நான் இப்படி சிரித்து பல காலம் ஆகிவிட்டது என்று என்னிடம் கூறினார். இரண்டாம் பாதியும் பிடித்ததால் தான் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார் என்று கூறியுள்ளார் கார்த்தி.

வில்லன்

வில்லன்

படம் முழுக்க வில்லனாக வரும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். அண்ணய்யா ஹீரோவாக நடித்தால் நான் வில்லனாக நடிக்க ரெடி என கார்த்தி தெரிவித்துள்ளார்.

English summary
Karthi said that if Suriya is the hero then he is ready to do full fledged villain role. He said so at the success meet of Kashmora held in Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil