»   »  இளைய சூப்பர் ஸ்டார்... என் தகுதிக்கு மீறிய பாராட்டு.. கூச்சமா இருக்கு!- தனுஷ்

இளைய சூப்பர் ஸ்டார்... என் தகுதிக்கு மீறிய பாராட்டு.. கூச்சமா இருக்கு!- தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய சூப்பர் ஸ்டார் என்று என்னை தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம்... கூச்சமாக உள்ளது என நடிகர் தனுஷ் கூறினார்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகிய இருவரும் தயாரித்துள்ள படம் தொடரி.

பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ் இணையாக நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் சினிமாவில் நேற்று நடந்தது.

இளைய சூப்பர் ஸ்டார்

இளைய சூப்பர் ஸ்டார்

இந்த விழா தொடங்குவதற்கு முன்பிருந்தே தனுஷைப் பார்க்கும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் இளைய சூப்பர் ஸ்டார் என்று முழங்கினர். இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் தனுஷ்தான் இளைய சூப்பர் ஸ்டார் என்று உணர்ச்சிவசப்பட்டார்கள்.

தகுதிக்கு மீறி...

தகுதிக்கு மீறி...

இதைத் தொடர்ந்து மைக் பிடித்த தனுஷ், "இங்கே என் தகுதிக்கு மீறி என்னை சிலர் பாராட்டி பேசினார்கள். அப்படி பேச வேண்டாம். எனக்கு கூச்சமாக இருக்கிறது. என் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர்கள் அப்படி பேசுவதாக எடுத்து கொள்கிறேன். அவர்களின் அன்புக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

டூப் போடாமல்...

டூப் போடாமல்...

இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நான், ‘டூப்' போடாமல் நடித்திருப்பதாகவும், ஓடும் ரெயிலில் கூரை மீது ஏறி நின்று அதிக ‘ரிஸ்க்' எடுத்து சண்டை போட்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். அதற்கான பாராட்டுகள் முழுவதும் இயக்குநர் பிரபு சாலமனுக்குத்தான் சேர வேண்டும்.

தலை சுற்றும்

தலை சுற்றும்

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, என் கை எலும்பு முறிந்து விட்டது. அதில் இருந்து உயரமான இடங்களில் ஏறி நின்றால், என் தலை ‘கிர்' என்று சுற்றும். இந்த படத்தில், ஓடும் ரெயில் கூரை மீது ஏறி நின்று சண்டை போட வேண்டும் என்றதும், தலை சுற்றுமே என்று நினைத்தேன்.

அதை பிரபு சாலமன் புரிந்து கொண்டு ரெயிலின் கூரை மீது முதலில் அவர் ஏறி நின்று, அந்த இடம் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பார். அதன் பிறகே என்னை மேலே வரச் சொல்வார். என்னை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். எனவே பாராட்டுகள் முழுவதும் அவருக்கும், ஸ்டண்ட் கலைஞர்களுக்கும்தான் பொருந்தும்.

எப்போ கால்ஷீட் கேட்டாலும்...

எப்போ கால்ஷீட் கேட்டாலும்...

இந்த படத்துக்காக முதன்முதலாக பிரபு சாலமன் என்னை சந்தித்தபோது, அவரிடம் நான் கதை கேட்கவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால், ‘‘எப்ப கால்ஷீட் வேண்டும்?'' என்றுதான் கேட்டேன். இப்போது படம் முடிந்து விட்டது. என் நம்பிக்கையை அவர் காப்பாற்றி விட்டார். படம் நன்றாக வந்திருக்கிறது. அதேபோல் சத்யஜோதி பிலிம்ஸ் எப்போது ‘கால்ஷீட்' கேட்டாலும், நடித்துக் கொடுப்பேன்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்

ரசிகர்களுக்கு அட்வைஸ்

ரசிகர்கள் என்னை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் பெருமைப்படுகிற அளவுக்கு நான் கடுமையாக உழைப்பேன். ரசிகர்களும் நான் பெருமைப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மா-அப்பாவுக்கு நல்ல மகனாக, மனைவிக்கு நல்ல கணவராக, குழந்தைக்கு நல்ல தந்தையாக இருக்க வேண்டும். குடும்பம்தான் முக்கியம்,'' என்றார்.

English summary
In Thodari audio launch actor Dhanush says that he was embarrassed to hear the title Ilaiya Superstar for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil