»   »  இளையராஜா இசையில் முதல் முறையாக விக்ரம் பிரபு

இளையராஜா இசையில் முதல் முறையாக விக்ரம் பிரபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இன்றைக்கு முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.

புதிய படங்கள்

புதிய படங்கள்

கும்கி, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, வெள்ளக்கார துரை போன்ற படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் வாகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் விஜய்யின் இது என்ன மாயம் படத்திலும் இவர்தான் நாயகன்.

மஞ்சப்பை இயக்குநர்

மஞ்சப்பை இயக்குநர்

அடுத்ததாக ‘மஞ்சப்பை' படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் விக்ரம் பிரபு. பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிக்கிறார்.

இளையராஜா

இளையராஜா

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். விக்ரம் பிரபுவின் தாத்தா சிவாஜி கணேசன் நடித்த ஏராளமான படங்களுக்கு இசை தந்தவர் இளையராஜா. அடுத்து பிரபு நடித்த கிட்டத்தட்ட 100 படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா.

மூன்றாவது தலைமுறை

மூன்றாவது தலைமுறை

இப்போது மூன்றாவது தலைமுறை நடிகரான விக்ரம் பிரபுவு படத்துக்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vikram Prabhu has signed a new movie directed by Manjappai fame Naveen Raghavan and for the first time Ilaiyaraaja composed for Vikram Prabhu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil