»   »  உலகிலேயே சகிப்புத் தன்மை அதிகம் உள்ள நாடு இந்தியாதான்!- விவேக் ஓபராய்

உலகிலேயே சகிப்புத் தன்மை அதிகம் உள்ள நாடு இந்தியாதான்!- விவேக் ஓபராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகிலேயே சகிப்புத் தன்மை அதிகம் கொண்ட நாடு இந்தியாதான் என்று நடிகர் விவேக் ஓபராய் கூறினார்.

இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் ஆமிர்கான் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நடிகர் என்ற முறையில், அவர் மீது நான் அதிக மரியாதை வைத்துள்ளேன். ஆனால், உலகிலேயே இந்தியாதான் சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட நாடு என்பது எனது கருத்தாகும்.

புனிதப் போர் என்ற பெயரில்...

புனிதப் போர் என்ற பெயரில்...

உலக நாடுகள், 'புனிதப் போர்' என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்தன. ஒரு மதத்தினர், மற்றொரு மதத்தினருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவிலோ பிறருடன் சேர்ந்து வாழ்வது குறித்து நாம் கற்றுக் கொண்டிருந்தோம்.

பெருமை

பெருமை

அனைத்து மதங்கள், சித்தாந்தங்கள், ஆலோசனைகள், அரசியல் ஆகியவற்றின் சங்கமாக இந்தியா உள்ளது. இதை நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். இதுபோன்ற நாட்டில் வாழ்வதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

இந்த நாட்டில்தான் எல்லாம்

இந்த நாட்டில்தான் எல்லாம்

நாட்டுக்கு பங்களிப்பை அளிப்பதுதான், உலகிலேயே பெரிய விஷயம் ஆகும். ஆதலால், நான் இந்த நாட்டிலேயே வாழ்வேன்; இந்த நாட்டில்தான் சாவேன்," என்றார் விவேக் ஓபராய்.

சர்ச்சைப் பேச்சு

சர்ச்சைப் பேச்சு

ஹிந்தி நடிகர் ஆமிர்கான் அண்மையில் பேசும்போது, நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாகவும், இதனால் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆமிர்கானின் கருத்துக்கு பாஜக, சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

விளக்கம் அளித்த பிறகும்..

விளக்கம் அளித்த பிறகும்..

ஏற்கெனவே தனது பேச்சுக்கு நேற்றே நீண்ட விளக்கம் அளித்துவிட்டார் ஆமிர்கான். இருந்தாலும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன.

Embed:
English summary
Actor Vivek Oberoi says he respects superstar Aamir Khan’s body of work as an artist, but believes India is the most tolerant country.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil