»   »  இறுதிச்சுற்று வலிமை அதிகம்... மாதவனைப் புகழும் ரசிகர்கள்

இறுதிச்சுற்று வலிமை அதிகம்... மாதவனைப் புகழும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதா இயக்கத்தில் மாதவன், நாசர், ரித்திகா சிங் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் இறுதிச்சுற்று.

7 வருடங்கள் கழித்து மாதவன் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.


1 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இறுதிச்சுற்றில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார்.


இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கும் மாதவன் ரசிகர்களின் மனதை வென்றாரா? பார்க்கலாம்.


ஆர்யா

நடிகர் ஆர்யா "மேடி சகோதரா இறுதிச்சுற்று படத்தில் அசத்தி விட்டீர்கள். உங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்டிப்பாக படம் பெரிய வெற்றி பெறும்" என்று பாராட்டி இருக்கிறார்


இறுதிச்சுற்று வலிமை

"இறுதிச்சுற்று ஒரு சிறந்த மற்றும் வலிமையான குத்துச்சண்டை படமாக இருக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதைக்கு மாதவன், ரித்திகா சிங்கின் நடிப்பு பெரும்பலமாக மாறியிருக்கிறது. ஒரு அற்புதமான இசையை சந்தோஷ் நாராயணன் கொடுத்திருக்கிறார்" என்று படம் முழுவதையும் பாராட்டி இருக்கிறார் வெங்கட் பிரவீன்.


ரசிகர்களுக்கு விருந்து

"இறுதிச்சுற்று படம் பார்த்தேன் மாதவனின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும். வசியம் செய்யக்கூடிய பின்னணி இசை மற்றும் அழகான திரைக்கதை" என்று படத்தைப் புகழ்ந்திருக்கிறார் எபின் அபி.


சுவாரஸ்யம் அதிகம்

"ஒரு பயிற்சியாளர்-மாணவி இடையேயான உறவை உணர்ச்சி + இறுக்கமான கிளைமாக்ஸ் கலந்து அளித்திருக்கின்றனர். 2 வது பாதி இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். எனினும் இறுதிச்சுற்று சுவாரஸ்யம் அதிகம்" என்று பாராட்டி இருக்கிறார் நாராயணன்.


ஒரு காட்சி கூட

"இறுதிச்சுற்று படத்தில் ஒரு காட்சி கூட சலிப்பாக இல்லை. பாடல் காட்சிகளை நன்றாக அமைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்" என்று சுகன் கிரிஷ் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் 7 வருடம் கழித்து வந்தாலும் ரசிகர்களின் மனதைக் கவருவதில் மாதவன் எந்தக் குறையும் வைக்கவில்லை.English summary
Madhavan, Ritika Singh Starrer 'Irudhi Suttru' Movie Today Released Worldwide - Audience Live Response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil