»   »  ஊரெல்லாம் "ஹெலனா ஹெலனா"ன்னு பாடுது.. ஆனால் விக்ரமோட "செல்" என்ன சொல்லுது?

ஊரெல்லாம் "ஹெலனா ஹெலனா"ன்னு பாடுது.. ஆனால் விக்ரமோட "செல்" என்ன சொல்லுது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருமுகன் படத்தில் வரும் ஹெலனா ஹெலனா பாடல் தான் ஊரெல்லாம் ஒலிக்கிறது. ஆனால் விக்ரமோ சாமுராய் படத்தில் வரும் மூங்கில் காடுகளே பாடலை தனது செல்போனில் ரிங்டோனாக வைத்துள்ளார்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள இருமுகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இருமுகன் டிரெய்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

Irumugan Halena is a hit among youth

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வரும் ஹெலனா ஹெலனா பாடல் தான் இன்றைய தேதிக்கு இளைஞர்களை மிகவும் கவர்ந்த பாடலாக உள்ளது. பல இளசுகள் அதை தான் தங்கள் செல்போனில் ரிங்டோனாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் விக்ரமோ தனது நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சாமுராய் படத்தில் வரும் மூங்கில் காடுகளே பாடலை ரிங்டோனாக வைத்துள்ளாராம். அந்த படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ரிங்டோன் வைத்துள்ளதை நீ பார்த்த என்று கேட்டால் நாங்கள் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை அவரே இதை இருமுகன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

English summary
Halena song from Vikram's Irumugan is a huge hit among youth. But Vikram is having a different song as his ringtone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil