Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போற போக்க பாத்தா சூர்யா அமேசான் ப்ரைமையே குத்தகைக்கு எடுத்துடுவாரு போல...2022 திட்டங்கள்
சென்னை: நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் தான் ஜெய் பீம்.நவம்பர் 2ஆம் தேதி அமேசானில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தது.
சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து ஜோதிகா நடித்து இருக்கும் படமான உடன்பிறப்பே படமும் அமேசான் ப்ரைமில் வெளிவரும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பிக்
பாஸ்
புதிய
சீசனை
தடை
செய்ய
நெட்டிசன்கள்
கோரிக்கை..
#BoycottBiggBoss15
டிரெண்டாக
காரணம்
என்ன?
சமீபத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து ரம்யா பாண்டியன் நடித்து நல்ல பெயரை பெற்ற ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும் என்ற திரைப்படமும் அமேசான் ப்ரைமில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்மகள் வந்தாள்
ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் தான் பொன்மகள் வந்தாள்.திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜோதிகாவிற்கு இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்த நிலையில் அனைவரின் கவனமும் ஒடிடி பக்கம் திரும்பியது.இதனை அறிந்த பல தயாரிப்பு நிறுவனம் ஒடிடியில் திரைப்படங்களை வெளியிட தொடங்கியது,இந்த படம் தான் முதன் முதலில் ஒடிடியில் வெளிவந்து பிள்ளையார் சுழி போட்டது.அதனாலேயே பல பிரச்சனைகளை சந்தித்தார் சூர்யா.

சூரரை போற்று
அதே போல் கடந்த ஆண்டு சூர்யா,அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அமேசானில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் சூரரை போற்று.திரையரங்குகள் மூடிய சமயத்தில் பெரிய நஷ்டத்தில் இருந்த திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒடிடியில் வெளியிட்டால் தங்களுக்கு அது மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சூர்யாவுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். பல பிரச்சனைகளை சந்தித்த பிறகு சூரரை போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளிவந்தது.
Recommended Video

ரா ரா
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளிவந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் படம் தான் ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்,பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியன்,மிதுன்,வானி போஜன் நடித்துள்ள இந்த படம் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்,அரசியல் போன்ற பல சம்பவங்களை மையமாக கொண்டது.இந்த படமும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உடன் பிறப்பே
ஜோதிகா,சசிகுமார்,சமுத்திரக்கனி, சூரி, போன்ற பலரும் நடித்து இந்த மாதம் 14ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் "உடன் பிறப்பு". படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான்.இந்த படமும் சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது.கிராமத்து கெட் அப்பில் இருக்கும் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.சசிகுமாரும் இருப்பதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஜெய் பீம்
சமீத்தில் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த போஸ்டர் தான் ஜெய் பீம்.வக்கீலாக வரும் சூர்யா,கர்ப்பிணியாக பெண் பிள்ளையுடன் நிற்கும் ஏழை பெண் என்று படத்தின் போஸ்டரே எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.இந்த படமும் நவம்பர் 2ஆம் தேதி அமேசானில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தது.சூர்யா நிறுவனம் தயாரித்து அமேசானில் வெளிவந்தால் கண்டிப்பாக அந்த படம் வெற்றி தான் என்று ரசிகர்களின் கருத்தாக உள்ளது.ஜெய் பீம் தொடர்ந்து இவரது தயாரிப்பில் ஓ மை டாக் ,விருமன் போன்ற படங்களும் லிஸ்டில் உள்ளது.

நெட்டிசன்கள் முணுமுணுப்பு
மேலும் தொடர்ச்சியாக இவரது படங்கள் அனைத்தும் அமேசானில் வெளிவருவதால் போற போக்க பாத்தா சூர்யா அமேசானையே குத்தகைக்கு எடுத்துடுவாரு போல என்று நெட்டிசன்கள் முணுமுணுக்கின்றனர்.எது எப்புடியோ நல்ல நல்ல படங்கள் வந்தால் சரி! ஏக பட்ட அக்ரீமெண்ட்டுகள் அமேசானுடன் சூர்யா நிறுவனம் போட்டு உள்ளது. ஆல்ரெடி போட்ட டீலிங் படி வரிசையாக படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். இன்னும் பல புதிய அக்ரீமென்டுகள் போடப்படும் என்று மீடியா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.2022ஆம் ஆண்டுக்கு 6 படங்கள் 2023ஆம் ஆண்டுக்கு சில படங்கள் என்று பல சலசலப்பு வந்த வண்ணம் உள்ளது . பொறுத்து இருந்து பார்ப்போம்