»   »  'என்னது, அஜீத் ரூ 100 கோடியை டெபாசிட் செய்தாரா? அட அப்ரசன்டுகளா...!'

'என்னது, அஜீத் ரூ 100 கோடியை டெபாசிட் செய்தாரா? அட அப்ரசன்டுகளா...!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மோடியின் பண ஒழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு நடிகர் அஜீத் குமார் தான் வீட்டில் வைத்திருந்த ரூ 100 கோடியை ஒரு வங்கியில் டெபாசிட் செய்தார்...

இப்படி ஒரு செய்தி ஒரு வாரப்பத்திரிகையில் வர, ஆஹா... எங்க தல போல உண்டா என்று அஜீத் ரசிகர்கள் ஒரு புறமும், அவர்களுக்கு எதிரான கோஷ்டிகள் இன்னொரு பக்கமுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இணையதளங்களில்.

Is Ajith deposited Rs 100 cr after demonitisation?

அஜீத் அவர் உண்டு அவரது ஷூட்டிங் உண்டு என்று இருக்கிறார். இந்த பண ஒழிப்பு குறித்து அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அவர் தனது சம்பளத்தை பணமாக வாங்கும் பழக்கமில்லாதவர்.

எந்தப் படமாக இருந்தாலும், என்ன சம்பளமாக இருந்தாலும் வருமான வரி பிடித்தம் போக மீதியிருப்பதை காசோலையில் வாங்கிக் கொள்ளும் சிட்டிசன் அவர். அந்த காசோலையை வங்கியில் டெபாசிட் செய்துவிடுவார். எனவே அவர் கணக்கில் கறுப்புக்கு இடமில்லை என்பது திரையுலகம் அறிந்தது.

ஆனால் இந்த விவரமெல்லாம் தெரியாமல் சிலர் அவர் ரூ 100 கோடியை டெபாசிட் செய்துவிட்டார் என பொய்யான தகவல் பரப்ப, அதைப் பிடித்துக் கொண்டு மல்லுக் கட்டுகின்றனர் ரசிகர்கள்.

English summary
Some unauthorised sources spread rumour that Ajith has deposited Rs 100 cr in a Bank.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil