ரஜினியை இயக்கும் தனுஷ்... தலைவர் 170 ல் இவர் மட்டும் தான் மிஸ்ஸிங்கா ?

சென்னை : எத்தனை நடிகர்களை சூப்பர் ஸ்டார் என அடைமொழி வைத்து கூப்பிட்டாலும், சூப்பர் ஸ்டார் என பெயர் சொன்னதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ரஜினி தான். கடந்த 40 ஆண்டுகளாக தனது ஸ்டைல், 70 வயதிலும் இளமையான தோற்றம், துறுதுறுவென்ற நடை ஆகியவற்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் ரஜினி.

ரஜினி பெற்ற மாஸ் ஹீரோ தோற்றத்தை உலக அளவில் வெகு நடிகர்களால் மட்டுமே பெற முடிந்துள்ளது. இருந்தாலும் ரசிகர்களை ரஜினி அளவிற்கு வேறு எந்த நடிகரும் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை டாப் நடிகர்களின் படங்கள் வந்தாலும் ரஜினி படத்திற்கு இருக்கும் வரவேற்பே தனி தான்.

பிரம்மாண்ட ரிலீஸ்

பிரம்மாண்ட ரிலீஸ்

ரஜினி சமீபத்தில் தான் டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்து முடித்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 4 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

தலைவர் 169 யாருடன்

தலைவர் 169 யாருடன்

அண்ணாத்த படம் ரிலீசாவதற்கு முன்பே ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 ஐ இயக்க போவது யார் என்ற கேள்வியும், தலைவர் 169 படம் பற்றிய பல தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை டைரக்டர் தேசிங்கு பெரியசாமி தான் இயக்க போவதாகவும், அதற்காக ரஜினியிடம் அவர் கதை சொன்னதாகவும் கூறப்பட்டது.

இவ்வளவு செலவா

இவ்வளவு செலவா


தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையில், ராஜா காலத்து பிளாஷ்பேக் காட்சி ஒன்று வருகிறதாம். அது ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போய், உடனே ஓகே சொல்லி விட்டாராம். படத்தில் அரை மணி நேரம் மட்டுமே இந்த பிளாஷ்பேக் காட்சிகள் வருவதற்கு 100 கோடி செலவாகுமாம். அரை மணிநேரத்திற்கே 100 கோடி என்றால் படத்தின் மொத்த செலவு, ரஜினி உள்ளிட்ட நடிகர், நடிகைகளின் சம்பளம் ஆகியவற்றை கணக்கிட்டால் தலையே சுற்ற வைக்கிறது. இதனால் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டியதால் பிளாஷ்பேக் காட்சிகளை 10 நிமிடங்களாக குறைக்கும்படி ரஜினி, தேசிங்கு பெரியசாமியிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.

Recommended Video

VadaChennai Prequel: வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இனையும் Ken Karunas | Rajan Vagaiyara
தலைவர் 169 க்கு கடும் போட்டி

தலைவர் 169 க்கு கடும் போட்டி

ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, தலைவர் 169 படத்திற்காக தேசியங்கு பெரியசாமி மட்டுமில்லை சிறுத்தை சிவா, பி.வாசு, கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பல டைரக்டர்கள் ரஜினியிடம் கதை சொல்லி வருகிறார்களாம். ஆனால் இவர்களில் யாரையும் இதுவரை ரஜினி இறுதி செய்யவில்லையாம். டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியான பிறகே தலைவர் 169 பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம். தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பதாக வேறு ஒரு தகவல் கூறப்பட்டது.

ரஜினியை இயக்கும் தனுஷ்

ரஜினியை இயக்கும் தனுஷ்

இதற்கிடையில் தற்போது நடித்து வரும் மாறன், திருச்சிற்றம்பலம், கமிட் ஆகி உள்ள மற்ற படங்களை முடித்த பிறகு தனுஷ், புதிய படம் ஒன்றை இயக்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டது. பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த தனுஷ், தற்போது மீண்டும் டைரக்டராக உள்ளாராம். ரஜினியை வைத்து தான் தனுஷ், அடுத்த படத்தை இயக்க போகிறாராம். இதில் ரஜினியுடன் இணைந்து தனுஷும் நடிக்க போகிறாராம்.

ரஜினியின் குடும்ப படம்

ரஜினியின் குடும்ப படம்

மாமனார் ரஜினியுடன், தனுஷ் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தை ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து தயாரிக்க போகிறார்களாம். ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற உள்ள இந்த படம் தலைவர் 170 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

ரஜினியின் மகள்கள் ஏற்கனவே பல படங்களை தயாரித்து, அதிலும் பணியாற்றியும் உள்ளனர். அதுவும் மருமகன் தனுஷ் இயக்க போகும் படத்தில் ரஜினி நடிக்க போகிறார் என்பதும், ரஜினி - தனுஷ் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்கள் என்பதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே பல மடங்கு எகிற வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X