»   »  என்னது, ரஜினி மதம் மாறிட்டாரா? இந்த 'குரூப்புங்க' தொல்லை தாங்கலியேப்பா!

என்னது, ரஜினி மதம் மாறிட்டாரா? இந்த 'குரூப்புங்க' தொல்லை தாங்கலியேப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாட்ஸ்ஆப் வந்தாலும் வந்தது... ஏகப்பட்ட பொய்கள் உண்மை மாதிரியே வலம் வருகின்றன. இன்னும் சிலர் எப்போதோ வந்த செய்திகளை புதுசு மாதிரியே உலா வர வைத்து உட்டாலக்கிடி செய்கின்றனர்.

சில தினங்களாக என்டிடிவி கருத்துக் கணிப்பு என்ற பொய்யான சமாச்சாரத்தை, பக்காவாக போட்டோஷாப் வேலை செய்து ஏகப்பட்ட குரூப்புகளில் பகிர்ந்து வருகின்றனர்.

Is Rajini Baptised?

அதில் திமுகவுக்கு மட்டும் 160 சீட் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

நேற்றும் இன்றும் வாட்ஸ்ஆப்பில் பரபரவென சில படங்களை 'ரஜினி கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார்.. அவருக்கு பாதிரியார் ஞானஸ்தானம் செய்யும் காட்சி' என்ற கேப்ஷனோடு பகிர்ந்து வருகின்றனர்.

2 ஆண்டுகள் பழைமையான சமாச்சாரம் இது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஜினியை அவர் வீட்டில் சந்தித்த கிறிஸ்தவ பாதிரியார் சாமி தங்கையா, ஒரு சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.

ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பாதிரியாரே முன்வந்து நடத்திய பிரார்த்தனை அது. அந்தப் படங்கள் ஏற்கெனவே செய்தியாகவும் வந்தவைதான்.

ஆனால் இப்போது அதற்கு வேறு ஒரு பெயின்ட் அடித்த ரஜினி மதம் மாறிவிட்டார் என்றே புரளி பரப்பி வருகின்றனர்.

எங்கிருந்துதான் கிளம்புறாங்களோ இந்த பார்ட்டிங்க!

English summary
Some guys have spreading Rajinikanth's pics with a Church father with a fake caption 'Rajini baptised'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil