மீண்டும் காதலில் விழுந்தாரா சிம்பு...இவரை தான் திருமணம் செய்ய போகிறாரா ?
சென்னை : நடிகர் சிலம்பரசன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஹன்சிகா, நயன்தாரா ஆகியோருடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பல ஆண்டுகளாக கிசுகிசுக்களில் அடிப்பட்டு வந்தார் சிம்பு. காதல் கிசுகிசுக்களை தொடர்ந்து ரெட் கார்டு விவகாரத்தில் சிக்கினார்.

நீண்ட காலத்திற்கு பின் வெற்றி
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் அவர் நடித்த மாநாடு படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை பார்த்துள்ளார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான டைம் லூப் படமான மாநாட்டில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் வரவேற்பு
25 நாட்களில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த மாநாடு படம் தியேட்டரில் மட்டுமல்ல ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் பாராட்டை அள்ளி குவித்தது. மாநாடு படம் தந்த வெற்றியின் காரணமாக சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

காதலில் விழுந்தாரா சிம்பு
நயன்தாரா, ஹன்சிகா உடனான காதல் கை கூடாத நிலையில், தற்போது தன்னுடன் நடித்த மற்றொரு நடிகையை சிம்பு காதலித்து வருவதாக கூறப்படுகிறது. லாக்டவுனிற்கு முன்பே சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் நடித்தார் சிம்பு. இந்த படத்தில் இவருடன் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்தார்.

இவருடன் தான் காதலா
ஈஸ்வரன் படப்பிடிப்பின் போதே சிம்புவிற்கும், நிதி அகர்வாலுக்கு காதல் ஏற்பட்டதாம். இந்த ஷுட்டிங் முடிந்து தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இப்போதும் காதலில் இருக்கிறார்களா என சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள்.

விரைவில் திருமணமா
இருந்தாலும் சில சினிமா வட்டார தகவல்கள் படி சிம்புவும், நிதி அகர்வாலும் சென்னையில் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்களாம். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருவரும் முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால் சிம்புவோ, நிதி அகர்வாலோ இது பற்றி இதுவரை எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை.
Recommended Video

இருவரும் படங்களில் பிஸி
சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நிதி அகர்வால், மகிழ் திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











