»   »  வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைத்தேனா?: சிவகார்த்திகேயன்

வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைத்தேனா?: சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா துறையை விட்டு விரட்டும் அளவுக்கு தனக்கு பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாண்டே சிவகார்த்திகேயனிடம் பல கேள்விகள் கேட்டார்.

அப்போது சிவகார்த்திகேயன் கூறுகையில்,

மேன்

மேன்

இனி என் இமோஷன்களை கட்டுப்படுத்துவேன். இனி நான் ஒரு பாயாக இல்லாமல் மேனாக நடந்து கொள்வேன். நான் ரெமோ படத்தில் கஷ்டப்பட்டு நடித்து ஒன்றும் கிடைக்கவில்லை என நான் அழதேனோ என பலர் நினைத்துள்ளனர். நிச்சயமாக இல்லை.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன், சந்திப்பேன். இன்டஸ்ட்ரியை விட்டு அனுப்பினால் கூட சந்தித்து தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

சிவா

சிவா

எனக்கு பிரச்சனை செய்பவர்கள் யார் என அனைவருக்கும் தெரிய வேண்டியது இல்லை. எனக்கு பிரச்சனை வர வளர்ச்சி மிகப் பெரிய காரணம். நான் வாக்கு தவறவில்லை.

விலகிச் செல்கிறேன்

விலகிச் செல்கிறேன்

நான் பிரச்சனைகளில் இருந்து விலகிச் செல்கிறேன். சிம்பு எனக்கு ஆதரவு தெரிவித்ததால் எங்கள் இருவருக்கும் ஒரே நபரால் தான் பிரச்சனை என்று இல்லை. எனக்கும், சிம்புவுக்கும் பர்சனலாக பழக்கம் இல்லை.

முடிந்துவிடும்

முடிந்துவிடும்

இந்த பிரச்சனையை முறையாக முடித்து வைக்க வேண்டும். இனி நான் எச்சரிக்கையுடன் இருப்பேன். வளர்த்துவிட்ட ஏணியை சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுவது அபாண்டம். எல்லோரும் நான் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவ்வளவு தான் வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுடன் சண்டை போட விரும்பவில்லை, ஒதுங்கிவிட்டேன்.

ஏணி

ஏணி

வளர்ந்து வந்த ஏணி மேல் வைத்திருக்கும் மரியாதை எப்பொழுதுமே அப்படியே இருக்கும். நான் அவர்களை பற்றி வெளியே தப்பா சொல்லாதது தான் வளர்ந்து வந்த ஏணி மீது வைத்துள்ள மரியாதை.

அரசியல்

அரசியல்

நானாவது அரசியலுக்கு வருவதாவது. ஆளை விடுங்க சார். நான் இன்னும் ஒரு நடிகராக அந்த பிரிவுக்குள்ளேயே முழுவதுமாக வரவில்லை. படம் தயாரிக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை.

English summary
Sivakarthikeyan has talked in detail about the issues he is facing in the film industry. He even talked about ditching the ladder that helped him to come to limelight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil