»   »  என்னது... சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டாரா?

என்னது... சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமூக வலைத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு, பொய்ச் செய்திகள், வீடியோக்கள்தான் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. எப்போதோ எடுத்த வீடியோக்களை தப்பான தகவல்களோடு வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.

அதற்கு லேட்டஸ்ட் பலி சூர்யா.

அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்ற தகவலுடன் ஒரு வீடியோ வைரலாக வலம் வர, உடனடியாக சூர்யா தரப்பிலிருந்து ஒரு மறுப்பும் விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.

Is Surya converts to Islam?

அந்த விளக்கம்:

இணையதளங்களில் வைரலாகப் பரவிய அந்த வீடியோ, கடந்த 2013-ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா சென்றபோது எடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மானின் தாயார் கேட்டுக்கொண்டதால், கடப்பாவில் உள்ள அமீர் பீர் தர்காவுக்கு சூர்யா சென்று வழிபட்டார்.

இந்தப் பழைய வீடியோவைப் பார்த்து தவறாகப் புரிந்துகொண்ட சிலர், இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்தி பரப்பி வருகின்றனர். சூர்யா இஸ்லாம் மதம் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ஆனால் அவர் மதம் மாறவில்லை," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Actor Surya's media manager said that the actor wasn't convert to Islam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil