twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரெய்டு இல்லாவிட்டால் ஐடி அதிகாரிகள் எதற்கு வந்தார்கள்?: உண்மையை சொன்ன விஜய் சேதுபதி

    By Siva
    |

    சென்னை: விஜய் சேதுபதியின் ஆடிட்டர் செய்ய வேண்டியதை செய்யாததால் தான் வருமான வரித்துறையினர் அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    கோலிவுட்டின் பிசியான நடிகரான விஜய் சேதுபதியின் வளசரவாக்கம் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். உடனே விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு என்ற தகவல் தீயாக பரவியது.

    அது ரெய்டு இல்லை என்று பின்பு தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்தும், த்ரிஷாவுடன் சேர்ந்து 96 படத்தில் நடித்தது குறித்தும் விஜய் சேதுபதி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது,

    ஆடிட்டர்

    ஆடிட்டர்

    என் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. அதை ரெய்டு என்று சொல்ல முடியாது, கணக்கு சரி பார்த்தல் என்றே சொல்ல வேண்டும். என் ஆடிட்டர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் இப்படி நடந்துவிட்டது. நான் கொஞ்சம் பிரபலமாகிவிட்டதால் என்னிடம் நிறைய பணம் இருக்கும் என்று அதிகாரிகள் நினைத்துவிட்னர். என் அண்ணன், தம்பி வீடுகளிலும் கூட வருமான கணக்கு சரி பார்க்கும் சம்பவம் நடந்தது.

    லேசா லேசா

    லேசா லேசா

    த்ரிஷாவின் லேசா லேசா படம் ரிலீஸான போது நான் துபாயில் வேலை செய்தேன். அவரின் தீவிர ரசிகன் நான். நானும் ஒரு நாள் நடிகன் ஆவேன், எனக்கு பிடித்த த்ரிஷாவுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. த்ரிஷாவுக்கு மாடர்ன் உடை மட்டும் அல்ல புடவையும் அழகாக உள்ளது.

    நயன்தாரா

    நயன்தாரா

    த்ரிஷா, நயன்தாரா, தமன்னா ஆகியோர் தங்களின் வேலையில் மிகவும் கவனமாக இருப்பவர்கள். அந்த காரணத்தால் தான் அவர்கள் 3 பேரும் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு இதுவரை 32 முறை காதல் வந்துள்ளது. (என்னாது, 32 முறையா???)

    பெண்கள்

    பெண்கள்

    சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் புனிதமானவர்கள். அம்மா, மனைவி, தங்கை, மகள் என்று என் வாழ்க்கையில் பாசமுள்ள பெண்கள் உள்ளனர் என்றார் விஜய் சேதுபதி. சபரிமலை தீர்ப்பை திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vijay Sethupathi has clarified as to why Income Tax officials visited his house and office on friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X