அஜித்தின் ஏகே 63 ஐ இயக்க போவது இவரா? ...அப்போ அடுத்த பிளாக்பஸ்டர் கன்ஃபார்ம்
சென்னை : நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து வருகிறார் அஜித். ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகும் படங்கள் அனைத்தும் ஹிட்டாகி வருகின்றன.
மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் ஏகே 61 படம் உருவாகி வருகிறது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 13 அன்று ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவியது. ஏகே 61 படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தை இயக்குகிறாரா சுதா கொங்கரா
இந்நிலையில் இளம் டைரக்டர்கள் மட்டுமின்றி டாப் டைரக்டர்கள் பலரும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் ஏகே 63 படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. ஆனால் மற்ற படங்களில் தான் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு அஜித்தை இயக்குவதற்கான வாய்ப்பு குறைவு என சுதா கொங்கரா விளக்கம் அளித்தார்.

இவங்க தான் ஏகே 63 டைரக்டரா
இந்த சமயத்தில் லேட்டஸ்ட் தகவலாக அஜித்தின் ஏகே 63 படத்தை, விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி - மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் செம ஹிட் ஆனது. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

கதையும் ரெடி ஆகுதா
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தாங்கள் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ண உள்ளதாக சஸ்பென்சை உடைத்தார் புஷ்கர். அஜித்திற்காக கதை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இது பற்றி வேறு எந்த தகவலும் அவர்கள் தெரிவிக்காததால் இவர்கள் ஏகே 63 படத்தை தான் இயக்க போகிறார்களா அல்லது அஜித்தின் வேறு படத்தை இயக்க போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்து யாரை இயக்க போகிறார்கள்
விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சமீபத்தில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளி வந்த சுழல் வெப்சீரிசும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இதுன் அடுத்த பாகம் உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அவர்கள் அடுத்து இயக்க போகும் படமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











