இரட்டை வேடம்,மதுரை தாதா...அஜித்தின் அடுத்த பட டைரக்டர் இவரா?

சென்னை : வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹெச்.வினோத்தை தொடர்ந்து அஜித்தை இயக்க போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதிலும் அடுத்தடுத்து வரிசையாக பல படங்களுக்கு கதை கேட்டு, அஜித் ஓகே செய்து வருவதாக கூறப்படுவதால், அவரின் அடுத்த பட டைரக்டர் யார், அடுத்து எந்த மாதிரியான கதையில் அஜித் நடிக்க போகிறார் என்பதை ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகிறார்கள்.

ஏகே 61 ஷுட்டிங் ரெடி

ஏகே 61 ஷுட்டிங் ரெடி

ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி மீண்டும் இணையும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை என்றும், இதில் ஹீரோ-வில்லன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டமாக அஜித் மட்டும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

ஆச்சரியப்படுத்திய அஜித்

ஆச்சரியப்படுத்திய அஜித்

ஏகே 61 ஷுட்டிங் முடிவதற்கு முன்பாக, அடுத்த படத்திற்கு கதை கேட்டு, ஓகே சொல்லி உள்ளார் அஜித். ஹெச்.வினோத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், இந்த படத்தை தாங்கள் தான் தயாரிக்க உள்ளதாகவும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ரசிகர்களுக்காக அஜித் எடுத்த முடிவு

ரசிகர்களுக்காக அஜித் எடுத்த முடிவு

அஜித், கிட்டதட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக ஒரு சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே கமிட்டாகி நடிக்க வேண்டும். அதை முடித்த பிறகே அடுத்த படத்தின் வேலைகளில் இறங்க வேண்டும் என்பதை விடாபிடியான கொள்கையாக கடைபிடித்து வருகிறார் அஜித். ஆனால் வலிமை படத்திற்காக ரசிகர்கள் இரண்டு ஆண்டு காத்திருந்ததால், இனியும் அது போல் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என்பதற்காக தற்போது தனது இத்தனை ஆண்டு கொள்கையை தளர்த்தி, ஒரே சமயத்தில் அடுத்தடுத்த படங்களுக்கு வரிசையாக கதை கேட்டு, ஓகே சொல்லி வருகிறார் அஜித்.

அடுத்து அஜித்தை இயக்க போவது இவரா

அடுத்து அஜித்தை இயக்க போவது இவரா

ஏகே 61, ஏகே 62 மட்டுமல்ல ஏகே 63, ஏகே 64 படங்களுக்கு கதை கேட்டு ஓகே செய்து விட்டாராம் அஜித். லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 63 படத்திற்காக சிறுத்தை சிவாவிடம் ஓகே சொல்லி விட்டாராம் அஜித். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவா - அஜித் ஜோடி இணைய உள்ளது.

இனி டூயல் ரோல் தான்

இனி டூயல் ரோல் தான்

இதே போல் ஏகே 64 படத்திற்காக டைரக்டர் ஸ்ரீ கணேஷிடம் கதை கேட்டு ஓகே செய்து விட்டாராம் அஜித். எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்க போகும் படம் கேங் ஸ்டரை மையமாகக் கொண்ட கதையாம். மதுரையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். ஏகே 62, 63 படங்களை முடித்த பிறகு இந்த படத்தை துவங்க போகிறாராம் அஜித். ரெட் படத்திற்கு பிறகு மீண்டும் மதுரை தாதா ரோலில் அஜித் கலக்க போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X