சர்தாரிற்கு பிறகு கார்த்தியை இயக்க போவது யார்... எப்போ ஷுட்டிங் தெரியுமா?

சென்னை : வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கார்த்தியை, சர்தார் படத்திற்கு பிறகு யார் இயக்க போகிறார், எந்த மாதிரியான கதையில் அவர் நடிக்க போகிறார் என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், கார்த்தியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் ரோலில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கொம்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இறுதிக்கட்டத்தில் சர்தார் ஷுட்டிங்

இறுதிக்கட்டத்தில் சர்தார் ஷுட்டிங்

பொன்னியின் செல்வன், விருமன் இரண்டும் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக, நீண்ட காலமாக பாதியில் நிற்கும் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஸ்பை த்ரில்லர் படமான சர்தார் படத்தில் நடத்து வருகிறார் கார்த்தி. சிறுத்தை படத்திற்கு பிறகு கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்டன்ட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இளமை, முதுமை என இரு தோற்றங்களில் கார்த்தி நடிக்கிறார்.

கார்த்தியை இயக்க போவது இவரா

கார்த்தியை இயக்க போவது இவரா

இந்நிலையில் சர்தார் படத்தை முடித்த பிறகு, ஜிப்சி மற்றும் ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கும் படத்தில் தான் கார்த்தி நடிக்க போகிறாராம். இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகிறதாம். கார்த்தி - ராஜு முருகன் இணையும் படத்தின் ஷுட்டிங் மே மாதம் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எப்போ புது பட ஷுட்டிங்

எப்போ புது பட ஷுட்டிங்

கார்த்தி தற்போது நடித்தும் வரும் சர்தார் படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் வரை நடக்க உள்ளதாம். ஏப்ரலில் சர்தார் படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்த பிறகு, மே மாதத்தில் ஷுட்டிங்கை துவக்க போகிறார்களாம். அதற்கு முன் ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இந்த படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தில் நடிக்க போகும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றியும் முடிவு செய்யப்பட உள்ளதாம்.

 ஏப்ரலில் தெரிந்து விடும்

ஏப்ரலில் தெரிந்து விடும்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் பெரிய அளவில் பேசப்பட்டதால் அவர் கவனிக்கப்படும் டைரக்டர் ஆகி விட்டதால் அவரின் இந்த படத்தை இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம். பெயரிடப்படாத இந்த படத்தின் படக்குழு பற்றி விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X