இனி எல்லாம் பான் இந்தியா படம் தான்...ராக்கி பாயை அடுத்து இயக்க போவது யார்?

சென்னை : கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கன்னட நடிகர் யாஷ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

2007 ம் ஆண்டு துணை நடிகராக நடிக்க வந்த யாஷ், கேஜிஎஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபலமான நடிகராகி விட்டார். கேஜிஎஃப் 2 படத்திற்கு கிடைத்த எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றி அவரை தென்னிந்திய சினிமாவின் அடையாளமாக மாற்றி விட்டது.

பிரபாசை தொடர்ந்து தற்போது யாஷும் ஒரே படத்திலேயே அனைவருக்கும் தெரிந்த, இந்திய அளவில் பிரபலமான நடிகராகி விட்டார். இதனால் ராக்கி பாய் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேஜிஎஃப் 3 எப்போ வரும்

கேஜிஎஃப் 3 எப்போ வரும்

ஏற்கனவே பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 3 இயக்க போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் சில சீன்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக யாஷ் பல பேட்டிகளில் குறி உள்ளார். இதற்கிடையில் யாஷின் அடுத்தடுத்த படங்கள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

என்னது 4 பான் இந்தியா படமா

என்னது 4 பான் இந்தியா படமா

லேட்டஸ்ட் தகவலின் படி, யாஷ் வரிசையாக நான்கு பான் இந்தியா படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாஷ் பயங்கர பிஸியாம். இவர் கமிட்டாகி உள்ள 4 படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

யாஷை அடுத்து இயக்க போவது யார்

யாஷை அடுத்து இயக்க போவது யார்

யாஷின் அடுத்த படத்தை டைரக்டர் நர்தன் இயக்க போவதாகவும், இதில் புஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. இதில் யாஷ், கடற்படை அதிகாரியாக நடிக்க போவதாகவும் குறப்பட்டது. ஆனால் அது எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

100 கோடி சம்பளமா

100 கோடி சம்பளமா

இதற்கிடையில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் படத்திலும் யாஷ் நடிக்க போவதாகவும், இதற்காக அவருக்கு 100 கோடிக்கும் அதிகமான தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும், இதற்காக கதை கேட்டு வருவதாகவும் தகவல் கசிந்தது.இதே

இது மெகா பிளானா இருக்கே

இது மெகா பிளானா இருக்கே

லேட்டஸ்ட் தகவலின் படி, யாஷின் 19வது படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க போகிறாராம். இந்த படத்தை 800 கோடி பட்ஜெட்டில் எடுக்க பிளான் செய்திருக்கிறார்களாம். 2.0, ஐ படங்களை போல் மெகா பட்ஜெட் படமாக இது உருவாக்கப்பட உள்ளதாக குறப்படுகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக குறப்படுகிறது.

டிரெண்டிங்கில் கலக்கும் யாஷ்

டிரெண்டிங்கில் கலக்கும் யாஷ்

ஆனால் ஷங்கர் இந்தியன் 2, ஆர்சி 15 படங்களில் கமிட்டாகி உள்ளதால் யாஷ் 19 படம் அடுத்து ஆண்டு துவங்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக குறப்படுகிறது. யாஷ் 19 படம் பற்றிய பல தகவல்கள் சொல்லப்படுவதால் அவரின் ரசிகர்கள் #YassBoss என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X