»   »  சிம்பு வெய்ட் குறைத்து ஹேர்ஸ்டைல் மாற்றியது இதற்குத்தானா..?

சிம்பு வெய்ட் குறைத்து ஹேர்ஸ்டைல் மாற்றியது இதற்குத்தானா..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சிம்பு 'கெட்டவன்' படத்தை மீண்டும் கையில் எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 'காற்று வெளியிடை' படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியுடன் இணைந்து சிம்புவும் ஒரு நாயகனாக நடிக்க இருக்கும் தகவல் வெளியானது.

மணிரத்னம் படத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து நடிக்கவிரும்பும் சிம்பு, அதற்கு முன்பே அதாவது அடுத்த மாதம் முதல் ஒரு ஆங்கிலப் படத்தை இயக்கி, நடிக்கிறாராம்.

வெய்ட் குறைப்பு :

வெய்ட் குறைப்பு :

அந்தப் படத்திற்காக தாடி வளர்த்து வரும் அவர் தனது உடல் எடையை 10 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளார். புது கெட்டப்பில் இருக்கும் அவரது சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

புது கெட்-அப் :

புது கெட்-அப் :

சிம்பு தனது ஹேர்ஸ்டைலை மாற்றி 'மொஹாக்' எனும் ஹேர்ஸ்டைலில் இருக்கிறார். இதுவும் ஆங்கிலப் படத்திற்காகத்தான் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

முழு கவனமும் இதில்தான் :

முழு கவனமும் இதில்தான் :

தனது இயக்கத்தில் உருவாகவுள்ள ஆங்கிலப் படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

பாடல்களே கிடையாது :

பாடல்களே கிடையாது :

ஆங்கிலத்தில் மட்டுமே படமாக்கிவிட்டு, மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் சிம்பு. இப்படத்தில் பாடல்கள் கிடையாது. மேலும், இடைவேளையின்றி ஒரே கட்டமாக திரையிடவும் முடிவு செய்திருக்கிறார்.

English summary
Simbu is acting in Mani Ratnam's film next January. Before that, he has to direct an English movie. Simbu has loosed his body weight by over 10 kg.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil