விக்ரம் பட வேலைகளை முடிச்சுட்டாரா கமல்... பிக்பாஸ் தான் காரணமா ?
சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் கமல் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதுவரை வெளியான போஸ்டர், தகவல்களின்படி பார்த்தால் இந்த படம் கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டது என தெரிகிறது.
வழக்கமான கதையாக இருந்தாலும் கமல் படம் என்பதால் இந்த படத்தை எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆக்குவதற்காக கூடுதலாக பல சுவாரஸ்யமான, புதுமையான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதில் முக்கியமானது கமல் 80 களில் இருப்பது போல் இளமை தோற்றத்திற்கு மாறுவதாம்.

கமல் மகனாக காளிதாஸ்
கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற திறமையான நடிகர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. இந்த படத்தில் இளம் நடிகரும், நடிகர் ஜெயராமின் மகனுமான காளிதாஸ் ஜெயராம், கமலின் மகன் ரோலில் நடிக்க உள்ளாராம்.

மற்றொரு பிக்பாஸ் பிரபலம்
இதே போல் மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன், சீரியல் நடிகை மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இவர்களுடன் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான சாண்டி மாஸ்டரும் இந்த படத்தில் நடன இயக்குனராக இணைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிடிஎஸ் ஃபோட்டோக்கள்
இந்நிலையில் விக்ரம் படத்தின் BTS ஃபோட்டோக்களை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அடிக்கடி வெளியிட்டு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி வருகிறார். இதில் லேட்டஸ்டாக கமல், பைக்கில் அமர்ந்திருப்பது போலவும், அவர் அருகில் ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு, லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஆகியோர் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

கமல் வேலை முடிந்ததா
அத்துடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். முதல்கட்ட ஷுட்டிங் காரைக்குடியில் நடந்து வந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் புதுச்சேரியில் நடந்து வருவதாக சமீபத்தில் கூறப்பட்டது. அதற்குள் ஷுட்டிங் முடிந்து விட்டதாக கூறி, கமலுடன் இருக்கும் ஃபோட்டோவை டைரக்டர் வெளியிட்டுள்ளதால், கமலை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்து விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் தான் காரணமா
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி துவங்க உள்ளது. 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிக்பாஸ் தொடரும் என்பதால், விக்ரம் படத்தில் கமல் நடிக்கும் காட்சிகளை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிக்பாஸிற்காக கமல் நடிக்க வேண்டிய சீன்கள் முடிக்கப்பட்டு விட்டதா என உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











