twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துபாயில் பரிசாக கிடைத்த பங்களா-ரூ. 17.84 கோடி வரி கட்ட ஷாருக் கானுக்கு உத்தரவு

    By Sudha
    |

    Sharukh Khan
    மும்பை: துபாயில் பரிசாக கிடைத்த பங்களாவுக்கு வருமான வரியாக ரூ. 17.84 கோடி கட்ட வேண்டும் என்று ஷாருக் கானுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

    துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு இந்த பங்களாவை ஷாருக் கானுக்குப் பரிசாக அளித்தது. ஆனால் இதற்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று ஷாருக் கானுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து விண்ணப்பித்தார் ஷாருக் கான். அதில், நான் எனது வருவாயிலிருந்து இதை வாங்கவில்லை. இது எனக்குப் பரிசாக கிடைத்த பங்களா. எனவே இதை எனது வருமானத்தில் காட்டத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.

    கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷாருக் கானது வருமானமாக ரூ. 126.31 கோடியைக் காட்டியிருந்தார். அதில் துபாய் பங்களாவை அவர் சேர்த்திருக்கவில்லை.

    இருப்பினும் துபாய் பங்களாவுக்காக ரூ. 17.84கோடி வருமான வரி கட்டியாக வேண்டும் என வருமான வரித்துறை தீர்மானமாக கூறி விட்டது.

    English summary
    Super Star Shah Rukh Khan has been asked to pay tax on a Rs.17.84 crore villa in the UAE gifted to him in 2008 for lending his name to promote a company but the Bollywood actor has contested the IT department's direction saying it cannot be construed as income from his business or profession. The 45-year-old actor received the villa as a gift from a Dubai-based company during assessment year 2008-09 for plugging a real estate project, IT sources said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X