»   »  இன்று வடிவேலுவின் பிறந்தநாள்: அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

இன்று வடிவேலுவின் பிறந்தநாள்: அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மதுரையில் இருந்து கோலிவுட் வந்தவர் வடிவேலு. காமெடியில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்தவர். வடிவேலுவின் பெயரை சொன்னாலே சிரிப்பு வரும் அளவுக்கு திறமையான காமெடியன்.

இடையில் கொஞ்சம் நேரம் சரியில்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் காமெடியில் கலக்கத் துவங்கியுள்ளார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காமெடி

காமெடி

வந்துட்டான்யா, வந்துட்டான்யா... என வடிவேலு காமெடியில் மட்டும் அல்ல குணசித்திர வேடங்களிலும் கூட அசத்தியுள்ளா். இதை யாரும் மறுக்க முடியாது.

பாடகர்

பாடகர்

காமெடியாகட்டும், குணசித்திர வேடங்களாகட்டும் சிறப்பாக நடிக்கும் வடிவேலு பாட்டு பாடுவதிலும் வல்லவர். அதற்கு அவர் பாடிய பாடல்களே சாட்சி.

டான்ஸ்

டான்ஸ்

வடிவேலு டான்ஸும் நன்றாகவே ஆடுவார். பகவதி படத்தில் இளைய தளபதி விஜய்யே வடிவேலு ஸ்டைலில் ஆடியிருப்பார். வடிவேலு பெண் வேடமிட்டு பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடியதும் பிரபலம்.

English summary
Comedian Vadivelu is celebrating his 56th birthday today. We wish the talented actor a very happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil