»   »  சம்சார சாகரத்தில் சல்மானும் குதிக்கப் போறாராமே... வெளிநாட்டு காதலியை மணக்கிறார்!

சம்சார சாகரத்தில் சல்மானும் குதிக்கப் போறாராமே... வெளிநாட்டு காதலியை மணக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சமீபத்தில் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் சல்மான்கான், விரைவில் தனது வெளிநாட்டுக் காதலியான லூலியாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தற்போது 50 வயதாகிறது. ஆனாலும் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதுவரை தன்னுடன் நடித்த நடிகைகள் பலருடனும் சேர்த்து அவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டது. சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் என அந்த காதலிகளின் பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இவர்களில் பலருக்கு வேறொருவருடன் திருமணமும் நடந்து விட்டது.

ஆனபோதும், தொடர்ந்து சல்மான்கான் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

லூலியா...

லூலியா...

இந்நிலையில், சல்மான்கான் தற்போது ருமேனிய அழகி லூலியா என்பவரைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. லூலியாவைத் தனது தோழி என மற்றவர்களிடம் அவர் அறிமுகப்படுத்தினாலும், அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகவே இருந்து வருகிறது.

பிறந்தநாள் விழாவில்...

பிறந்தநாள் விழாவில்...

சமீபத்தில் தனது 50 பிறந்தநாளைக் கொண்டாடினார் சல்மான். பிரபல பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்ட அந்தப் பிறந்தநாள் விழாவில், கேக்கை வெட்டியதும் லூலியாவுக்கு ஊட்டி விட்டார் சல்மான். இதன் மூலம், அவர்களது காதல் உறுதியானது.

புத்தாண்டு கொண்டாட்டம்...

புத்தாண்டு கொண்டாட்டம்...

மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் சல்மான்கான் புத்தாண்டை கொண்டாடியபோது அதிலும் லூலியா கலந்து கொண்டார். அங்கிருந்த குதிரையில் சவாரி செய்து பண்ணையை சுற்றியும் வந்தார். இந்தப் படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

விரைவில் திருமணம்...

விரைவில் திருமணம்...

இதைதொடர்ந்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, திருமண நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தி முடித்து விட்டதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

வழக்கு காரணமாக...

வழக்கு காரணமாக...

குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தி சாலையோரத்தில் படுத்து தூங்கிய ஒருவர் சாக காரணமாக இருந்ததாக சல்மான்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 3 வருடமாக நடந்த இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்தே அவரது திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Salman Khan is having a gala time with his family and friends at his Panvel farmhouse. And it seems like the Dabangg Khan is in no mood to end this party. Rumoured girlfriend Iulia Vantur took to Instagram to share a picture of her riding a horse at Salman Khan's farmhouse in Panvel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil