»   »  ஜெய்யின் அடுத்த படம் 'ராட்சஸன்'... அறிவிக்கப்பட்டதும் தேசிய அளவில் ட்ரெண்டானது!

ஜெய்யின் அடுத்த படம் 'ராட்சஸன்'... அறிவிக்கப்பட்டதும் தேசிய அளவில் ட்ரெண்டானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்தடுத்த ப்ளாப்களைக் கொடுத்தாலும், ஜெய்க்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜெய் கடைசியாக நடித்த ஹிட் படம் ராஜா ராணி.

அதன் பிறகு வெளியான அவரது படங்கள் பெரிதாகப் போகவில்லை. கடைசியாக வந்த புகழும் அவுட்.

ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும். இப்போது சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் ஜெய் நடித்து வருகிறார்.

Jai's next titled as Ratchasan

இந்த நிலையில் இன்னொரு புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘ராட்ஸன்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் சி.வி.குமார் தயாரிக்கவிருக்கிறார்.

ராட்சஸன் என்ற பெயர் அறிவிக்கப்பட்ட உடனே ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் சிறிது நேரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Jai's new movie has been titled as Ratchasan and the title has in Twitter trending for a while after the announcement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil