தலைவா.. ரஜினிகாந்தை பார்க்க நள்ளிரவில் கூடிய கேரள மக்கள்.. ஜெயிலர் 2வுக்கு எகிறும் மவுசு!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிதாக பூர்த்தி செய்யாத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் அடுத்ததாக ஜெயிலர் 2 படம் பக்கம் திரும்பியுள்ளது. கேரளாவில் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவு ரஜினிகாந்த் அந்த வழியாக வருகிறார் என்பதை அறிந்த மக்கள் 5 முதல் 6 மணி நேரம் காத்திருந்து பார்த்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தனக்காக நீண்ட நேரம் மக்கள் வரிசையாக காத்து நிற்பதை அறிந்த ரஜினிகாந்த் சன் ரூஃப் வழியாக எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே சென்ற காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளன.

மல்டி ஸ்டார் நடிகர்களை அழகாக கையாண்ட நெல்சன் இந்த படத்தில் மேலும், சில பிரபல நடிகர்களை இணைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எஸ்.ஜே. சூர்யா, பகத் ஃபாசில்: ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்த நிலையில், ஜெயிலர் 2 படத்தில் பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. கூலி படத்தில் மிஸ்ஸான வாய்ப்பை தற்போது வேட்டையன் படத்துக்குப் பிறகு பகத் ஃபாசில் மீண்டும் பிடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், எஸ்.ஜே. சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். அவர் தான் மெயின் வில்லனா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.
நள்ளிரவில் காத்துக்கிடந்த கேரள மக்கள்: நடிகர் ரஜினிகாந்த் கேரளாவில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நிலையில், அவரை காண கேரள மக்கள் மாலையில் இருந்து இரவு நேரம் வரை காத்திருந்து பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனக்காக காத்து நிற்கும் ரசிகர்களை சூப்பர் ஸ்டார் பார்த்தபடியே சென்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
நெல்சன் சொதப்ப மாட்டார்: கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான நெல்சன் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். பீஸ்ட் படம் மட்டுமே அவருக்கு மிஸ்ஸான நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாரை ரசிகர்கள் எப்படி பார்க்க நினைக்கிறார்களோ அந்தளவுக்கு காட்டி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தையும் அதே அளவுக்கு அட்டகாசமாக கொடுப்பார் என்றும் லோகேஷ் கனகராஜ் சொதப்பியது போல சொதப்பிவிட மாட்டார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











