twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளைஞர்களின் போராட்டத்தில் சினிமாக்காரர்கள் நுழையக் கூடாது: கமல்

    By Siva
    |

    சென்னை: ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டு திரையுலகினர் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவ-மாணவியர், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் புரட்சி செய்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள இளைஞர்கள் கூட்டம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்கம் நாளை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளது.

    போதும் போதும்

    போதும் போதும்

    உண்மையான தமிழ் உணர்வு இருந்தால் மெரினா வந்து எங்களுடன் போராடுங்கள். இல்லையெனில் உங்கள் வேலையை பாருங்க போதும் என்று புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கோரிக்கை

    கோரிக்கை

    நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று மீடியாக்கள் நடிகர் சங்க வளாகத்திற்கு சென்று அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று புரட்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கமல்

    கமல்

    இளைஞர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கவனத்தை திரையுலகினர் தங்கள் பக்கம் ஈர்க்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    மாணவர்கள்

    மாணவர்கள்

    குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் செய்கிறார்கள். அது அவர்களின் குரலாகவே இருக்கட்டும். அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டிவிடுவார்கள். தற்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சு திணற வைத்துள்ளனர் என்கிறார் கமல்.

    சினிமா

    சினிமா

    இது இளைஞர்களின் போராட்டம். இதில் சினிமாக்காரர்கள் நுழையக் கூடாது. அறப்போராட்டம் நடத்தும் அவர்களை தடுக்கும் அருகதை யாருக்குமே இல்லை என கமல் கூறியுள்ளார்.

    English summary
    Kamal Haasan has advised the film fraternity not to steal the lime light from the youngsters who are protesting for Jallikattu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X