»   »  ஜனநாதனின் வரலாற்றுப் படம்

ஜனநாதனின் வரலாற்றுப் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயற்கை, ஈ என இரு நல்ல படங்களைக் கொடுத்த எஸ்.பி.ஜனநாதன் அடுத்து ஒரு அட்டகாசமான வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதையுடன் வருகிறார்.

இயற்கை வந்தபோது, யார் இந்த ஜனநாதன் என திரையுலக வட்டாரத்தில் ஆச்சரிய ரேகைகள் படர்ந்தன. ஆனால் அத்தோடு சரி, ஜனநாதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரும் அதற்காக பெரிதாக கவலைப்படவில்லை.

அடுத்து ஈயுடன் அவர் வந்தபோது கோலிவுட்டே மிரண்டது. இயற்கை ஜனநாதனா இது என்று ஆச்சரியப்பட்டுப் போன பல பெரிய நடிகர்களும் கூட ஜனநாதன் கேட்டால் கால்ஷீட் தர ரெடியாக இருந்தனர்.

ஆனால் இம்முறையும் ஜனநாதன் அடுத்த படத்துக்கு ஆளாய்ப் பறக்கவில்லை. அடக்கி வாசித்தார். இப்போது ஒரு அட்டகாசமான கதையுடன் களம் இறங்கத் தயாராகி உள்ளார். இந்தப் படத்திலும் ஜீவாதான் நாயகனாம்.

இது வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதையாம். கதையைக் கேட்ட ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி.செளத்ரி, இக்கதை வெல்லும் என்று சந்தோஷமாகி விட்டாராம். இப்போது நல்ல தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறார் ஜனநாதன்.

சட்டுப்புட்டென்று ஹாட்ரிக் போடுங்க ஜனா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil