»   »  பாகுபலிக்காக பிரபாஸ் செய்ததை சங்கமித்ராவுக்காக செய்த ஜெயம் ரவி

பாகுபலிக்காக பிரபாஸ் செய்ததை சங்கமித்ராவுக்காக செய்த ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கமித்ரா படத்திற்காக 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.

சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகும் சரித்திரப் படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து விலகினார்.

இதையடுத்து ஹீரோயின் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ரவி

ரவி

சங்கமித்ரா படத்திற்காக ஜெயம் ரவி 2 ஆண்டு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதாலேயே பல ஹீரோக்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.

கால்ஷீட்

கால்ஷீட்

3 ஆண்டுகள் எடுத்த படங்களில் எல்லாம் நான் நடித்துள்ளேன். எனக்கு நாட்கள் முக்கியம் இல்லை. படத்தின் தரம் தான் மிகவும் முக்கியம். தரமான படம் வேண்டும் என்றால் அதிக நேரம் செலவிடத் தான் வேண்டும் என்கிறார் ரவி.

சங்கமித்ரா

சங்கமித்ரா

சங்கமித்ரா படத்தில் நடித்ததை எதிர்காலத்தில் நான் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும். படத்திற்கு செட் போடும்போது வேலையில்லாமல் சுமார் ஒரு மாதம் வீட்டில் சும்மா தான் இருக்க வேண்டும் என்று ரவி தெரிவித்துள்ளார்.

பொறுமை

பொறுமை

வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் நடிக்க பொறுமையாக இருக்க வேண்டும். நம் கெட்டப் முக்கியம். சங்கமித்ரா பாகுபலியை விட வித்தியாசமான படம் என்று ரவி கூறியுள்ளார்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க பிரபாஸ் 5 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார். அந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jayam Ravi has allotted two years for his upcoming movie Sangamithra to be directed by Sundar C.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil