கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்; பொன்னியின் செல்வன் 2 பாக ஷூட்டிங்கை முடித்த ஜெயம் ரவி ட்வீட்!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் மெயின் ஹீரோவான ஜெயம் ரவி அடுத்தடுத்து போட்டுள்ள ட்வீட்களால் ரசிகர்கள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டதாக நடிகர் ஜெயம் ரவி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயம் ரவி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் கசிந்துள்ளது.

பிரம்மாண்ட படைப்பு

பிரம்மாண்ட படைப்பு

பாகுபலி அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு பிரம்மாண்ட படம் வராதா? என ரசிகர்கள் எதிர்பார்க்க இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் உருவாகத் தொடங்கியது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

அருள் மொழி வர்மன்

அருள் மொழி வர்மன்

பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் அருள் மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது குவாலியரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வந்தியத்தேவனாக கார்த்தி

வந்தியத்தேவனாக கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தின் இன்னோரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான். அதில், நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். சமீபத்தில் குவாலியர் விமான நிலையத்தில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுந்தர சோழ மன்னராக நடித்து வரும் பிரகாஷ் ராஜ் உடன் கார்த்தி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

வில்லி ஐஸ்வர்யா ராய்

வில்லி ஐஸ்வர்யா ராய்

கதைப்படி நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என இரு வேடங்களில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். சோழர் குலத்தை கூண்டோடு அழிக்க வேண்டும் என நந்தினி செய்யும் சூழ்ச்சிகளும் அது எப்படி முடிந்தது என்பதும் தான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையே.. சமீபத்தில் ஐஸ்வர்யா ராயின் கெட்டப்பே லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

கனத்த இதயத்துடன்

கனத்த இதயத்துடன்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நடிகர் ஜெயம் ரவி தற்போது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து சில ட்வீட்களை போட்டு பொன்னியின் செல்வன் படத்தில் தனது போர்ஷன்களை முடித்து விட்டதாக அறிவித்துள்ளார். மேலும், இயக்குநர் மணிரத்னம் செட்டில் இருந்து கனத்த இதயத்துடன் விடை பெறுவதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு பாகங்களும்

இரண்டு பாகங்களும்

பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில், நடிகர் ஜெயம் ரவி இரண்டு பாகத்திற்கும் தேவையான தனது ஒட்டுமொத்த போர்ஷனையும் அதற்குள் முடித்து விட்டதாக ட்வீட் செய்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியும் கொடுத்துள்ளது. அவ்வளவு வேகத்தில் இரண்டு பாகங்கள் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

பாதிக்கு மேல் தான்

பாதிக்கு மேல் தான்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலிலேயே பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் பாதிக்கு மேல் இலங்கையில் தான் யானைப் பாகனாக அறிமுகமாகும். பின்னர் கதையின் கடைசி வரை பயணிக்கும். இயக்குநர் மணிரத்னம் முதலில் ஜெயம் ரவியின் போர்ஷன்களை மட்டும் விரைந்து முடித்திருக்கிறாரா? அல்லது ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் விரைவில் முடிக்க உள்ளாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

மணிரத்னத்துக்கு நன்றி

மணிரத்னத்துக்கு நன்றி

இத்தனை பெரிய படத்தை தகுந்த ஆளுமையுடன் இயக்கி வரும் மணி சாருக்கு என் நன்றி என்றும் அடுத்த பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறேன் என்றும் ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார். மீண்டும் மணி சார் இயக்கத்தில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளதையும் நடிகர் ஜெயம் ரவி தனது ட்வீட்கள் மூலமாக தெரிவித்துள்ளார்.

அம்மா பிறந்தநாள்

அம்மா பிறந்தநாள்

நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். அம்மாவின் பிறந்தநாளன்றே தனது இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிவடைந்த சந்தோஷ செய்தியை தெரிவித்து அம்மாவின் ஆசியுடன் இன்னமும் முன்னேற பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X