»   »  ஜெயம் ரவி ஒரு குட்டி கமல் ஹாஸன்: சொல்கிறார் பிரபுதேவா

ஜெயம் ரவி ஒரு குட்டி கமல் ஹாஸன்: சொல்கிறார் பிரபுதேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி ஒரு குட்டி கமல் ஹாஸன் என இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள போகன் படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, ஹன்சிகா, படத்தின் தயாரிப்பாளர்களான ஐசரி கணேஷ், பிரபுதேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரபுதேவா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

போகன்

போகன்

என் தயாரிப்பில் போகன் தான் முதலில் வெளியாக வேண்டியது. ஆனால் தேவி பட வேலைகள் விரைவில் முடிந்து அது முதலில் ரிலீஸாகிவிட்டது.

அருமை

அருமை

வித்தியாசமான கதையை இயக்குவது கஷ்டம். ஆனால் லக்ஷ்மண் தனது வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள். படத்தில் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி என அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.

ரவி

ரவி

ஜெயம் ரவியை ஒரு குட்டி கமல் ஹாஸன் என்றே கூற வேண்டும். எதுவுமே தெரியாதது போன்று அமைதியாக இருப்பார். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து படத்தில் சிறப்பாக நடித்துவிடுவார்.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

போகன் படத்தில் ஹன்சிகாவின் வித்தியாசமான நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். மின்சாரக் கனவு படத்தில் நடிக்கும்போது அரவிந்த்சாமியுடன் நட்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது அவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Bogan producer Prabhudeva said that Jayam Ravi is Kutty Kamal Haasan when it comes to acting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil