»   »  'டன்டனக்கா....' தன்னம்பிக்கைத் தமிழன் டிஆரை புண்படுத்த வேண்டாம்!- ஜெயம் ரவி

'டன்டனக்கா....' தன்னம்பிக்கைத் தமிழன் டிஆரை புண்படுத்த வேண்டாம்!- ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன்னம்பிக்கை தமிழன் டி ராஜேந்தரை புண்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடிக்க எஸ், நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் ரோமியோ ஜூலியட்.

இமான் இசையில் அனிருத் பாடிய டன்டனக்கா... பாடல் தமிழகமெங்கும் பரபரப்பாக ஹிட் அடிக்கிறது. அதே நேரத்தில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

இது பற்றி நடிகர் ஜெயம்ரவி கூறுகையில், "ரோமியோ ஜூலியட் படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கையும், 'எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார். இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும்' என்கிற அவரது தன்னம்பிக்கை தான் என் கதாப்பாத்திரத்தின் முன்மாதிரி.

டன்டனக்கா

டன்டனக்கா

அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான 'டன்டனக்கா...' என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம்.

எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரைப் பெருமை படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப் பட்டுள்ளது.

செல்லப் பிள்ளை

செல்லப் பிள்ளை

நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப் படுகிறேன்.

புண்படுத்த வேண்டாம்

புண்படுத்த வேண்டாம்

அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேடடுக்கொள்கிறேன்," என்றார்.

ஒரு டன்டனக்காவை வச்சு எவ்ளோ பப்ளிசிட்டிப்பா...!

English summary
Jayam Ravi has made an appeal to public do not insult T Rajendar with his phrase Dandanakka.. that is used in Romeo Juliet in a song.
Please Wait while comments are loading...