»   »  ரோமியோ ஜூலியட்டின் தாக்கத்தில் அடுத்தடுத்து வெளிவரும் ஜெயம் ரவியின் படங்கள்

ரோமியோ ஜூலியட்டின் தாக்கத்தில் அடுத்தடுத்து வெளிவரும் ஜெயம் ரவியின் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோமியோ ஜூலியட் வெற்றிப் படமாக மாறியதில் அடுத்தடுத்து ஜெயம் ரவி நடித்து கிடப்பில் கிடந்த படங்கள் தூசு தட்டப் பட்டு தற்போது முழுமூச்சுடன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.

ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ரோமியோ ஜூலியட் வசூல் ரீதியாக ஹிட்டடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நிமிர்ந்து நில் படத்திற்குப் பின் நடித்த எந்தப் படங்களும் வெளிவராமல் கடந்த ஒரு வருடமாக தத்தளித்து வந்த ஜெயம் ரவி இந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பார்முக்குத் திரும்பி இருக்கிறார்.

Jayam Ravi’s Boologam and Appatakkar Shooting’s Finished

ரோமியோ ஜூலியட் வெற்றியானது மேலும் சில மகிழ்ச்சிகளை ஜெயம் ரவிக்கு அளித்துள்ளது. ஆமாம் ஏற்கனவே அவரின் நடிப்பில் முடங்கிக் கிடந்த பூலோகம் மற்றும் அப்பாடக்கர் போன்ற படங்களின் படப்பிடிப்புகளை தற்போது முழுமூச்சில் நடத்தி முடித்திருக்கின்றனர் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.

முதலில் வெளிவந்து ரோமியோ ஜூலியட்டின் வெற்றியை அறுவடை செய்யப் போவது எந்தப் படம் என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

English summary
Last Week Jeyam Ravi’s Romio Juliet Movie Released In All Over World. Jayam Ravi starrer "Romeo Juliet" has got a great start at the Chennai box office. Now Jayam Ravi’s Boologam and Appatakkar Both Movie Shooting Is Finished.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil