»   »  ஜீவாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்!

ஜீவாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்!

Subscribe to Oneindia Tamil


இளம் நடிகர் ஜீவாவுக்கு சத்தம் போடாமல் கல்யாண நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனராம்.

Click here for more images

தமிழ் திரையுலகில் பல இளம் இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் ஆர்.பி.செளத்ரி. இவரது இளைய மகன் ஜீவா. தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்.

ராம் படத்திற்குப் பிறகு ஜீவா சிறந்த நடிகராகவும் அறியப்பட்டார். தற்போது ஜீவா நடிப்பில் கற்றது தமிழ் படம் நேற்று ரிலீஸாகியுள்ளது.

படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளால் பல தயாரிப்பாளர்கள் ஜீவாவை வைத்துப் படம் எடுக்க அலை பாய ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ஜீவா வீட்டில் சத்தம் போடாமல் ஒரு சந்தோஷ நிகழ்வு நடந்துள்ளது. அது ஜீவாவின் கல்யாண நிச்சயதார்த்தம். ஜீவாவுக்கு சொந்த ஊரில் (சூரத்) பெண் பார்த்து நிச்சயம் செய்துள்ளனராம். இதை படு ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் கல்யாணம் நடக்கவுள்ளது.

கல்யாணத்தை அனைவருக்கும் சொல்லி விட்டு பிரமாண்டமாகத்தான் செய்வார்களாம். தனக்கு நடந்த நிச்சயதார்த்தத்தை ஜீவாவே சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ஒத்துக் கொண்டார்.

நிச்சயதார்த்தம் நடந்துள்ளது உண்மைதான். விரைவில் கல்யாண தேதியை அதிகாரப்பூர்வமாக அப்பா அறிவிப்பார் என்றார் ஜீவா. இது காதல் கல்யாணம் இல்லையாம். பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம்தானாம்.

ஜீவா நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்துள்ளது. குடும்பத்தினர், ரொம்பவும் நெருக்கமான உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டார்களாம்.

ஜீவாவின் அண்ணன் நடிகர் ரமேஷுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

Read more about: jeeva, mumbai, rbchowdry, surat, tamil cinema
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil