»   »  ஜீவா 'எங்கேஜ்டு'!

ஜீவா 'எங்கேஜ்டு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
நடிகர் ஜீவாவுக்கும், பள்ளிக்காலத்துத் தோழியும் காதலியுமான சுப்ரியாவுக்கும் டெல்லியில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நவம்பர் 21ம் தேதி இருவரது திருமணமும் நடைபெறவுள்ளது.

இளம் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஜீவாவுக்கும், அவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவரான சுப்ரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல் நிலவி வந்தது. இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமணம் செய்து வைக்க முடிவானது.

சுப்ரியா எம்.பி.ஏ படித்துள்ளார். இன்டீரியர் டிசைனராக பணியாற்றி வருகிறார். தி.நகரில் உள்ள பள்ளியில் ஜீவா படித்துக் கொண்டிருந்தபோதுதான் சுப்ரியா அவருக்கு அறிமுகமானாராம். அப்போதிருந்தே இருவரும் நன்கு பழகி வந்துள்ளனர். கடந்த 13 வருடங்ளாக நண்பர்களாக இருந்து வந்த இருவரும், அதில் கடைசி 7 வருடங்களாக காதலர்களாக மாறியிருந்தனர்.

இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ஆசி வழங்கவே, காதல் சுபமாக முடியவுள்ளது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்தது. வருகிற 21ம் தேதி கல்யாணம் டெல்லியில் நடைபெறுகிறது. அதன் பின்னர் டிசம்பர் 1ம் தேதி சென்னை மேயர் ராமநாதன் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் தேனிலவைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார் ஜீவா.

வாழ்த்துக்கள் ஜீவா!

Read more about: jeeva supriya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil