»   »  நவ. 21ம் தேதி ஜீவா கல்யாணம்

நவ. 21ம் தேதி ஜீவா கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

நடிகர் ஜீவாவுக்கும், அவரது ஊரைச் சேர்ந்த உறவுப் பெண் சுப்ரியாவுக்கும் நவம்பர் 21ம் தேதி டெல்லியில் திருமணம் நடக்கவுள்ளது.

Click here for more images
தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஜீவாவும் முக்கியமானவர். இவரது அண்ணனும், நடிகருமான ரமேஷுக்கு சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.

இந்த நிலையில் ஜீவாவுக்கும் கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. இதை தட்ஸ்தமிழ்.காம்தான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு முதன் முதலில் அறிவித்தது.

திருமண நிச்சயதார்த்தத்தை ஜீவா குடும்பத்தினர் ரகசியமாக நடத்தினர். இதில் அவர்களது உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருமண தேதி தெரிய வந்துள்ளது.

நவம்பர் 21ம் தேதி டெல்லியில் கல்யாணம் நடக்கவுள்ளது. ஜீவா மணக்கப் போகும் சுப்ரியா, அவரது உறவுப் பெண் ஆவார். இது பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். அமெரிக்காவில் படித்துள்ளார்.

திருமணத்தை டெல்லியில் வைத்திருந்தாலும் தமிழ் திரையுலகினருக்காக ஜீவாவின் தந்தை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, டிசம்பர் 1ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஜீவா இதுவரை கற்றது தமிழ் - இனிமேல் மனைவி மூலம் காதலையும் கற்கட்டும்!

Read more about: jeeva
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil