»   »  மதுரைக்காரங்களுக்கும், எனக்கும் உள்ள பந்தம்: மனம் திறந்த ஜீவா

மதுரைக்காரங்களுக்கும், எனக்கும் உள்ள பந்தம்: மனம் திறந்த ஜீவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரைக்காரர்கள் பாசமானவர்கள் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் கவலை வேண்டாம் படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜீவா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

மதுரை மக்கள்

மதுரை மக்கள்

என் படங்கள் வெற்றி படமா, தோல்வி படமா என்பதை தீர்மானிப்பதே மதுரை மக்கள் தான். அவர்கள் ஒருபோதும் என்னை கைவிட்டது இல்லை. மதுரை மக்கள் ரசனையானவர்கள். படம் குறித்து அவர்கள் தெரிவிக்கும் கருத்து சரியாக இருக்கும்.

படங்கள்

படங்கள்

நான் இதுவரை 26 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி, எத்தனை தோல்வி என்பது எனக்கு தெரியாது. வெற்றி, தோல்வி பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. பிடித்ததை செய்கிறேன். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ராம்

ராம்

நான் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. என்னை நடிகனாக மாற்றிய படம் அமீர் இயக்கிய ராம். அமீர் மதுரைக்காரர். மதுரைக்கார்ரகள் ரொம்ப பாசமானவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். மதுரைக்கு வந்தபோது அதை தெரிந்து கொண்டேன்.

மதுரை

மதுரை

மதுரைக்கு எப்பொழுது வந்தாலும் இங்குள்ள மெஸ்களில் சாப்பிடுவேன். மதுரை ஹோட்டல்களில் கிடைக்கும் கறிதோசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

English summary
Actor Jiiva said that he likes people of Madurai and it is them who decide the fate of his movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil