»   »  ஜீவாவும் பிரியாணி திருவிழாவை ஆரம்பிச்சிட்டாரு!

ஜீவாவும் பிரியாணி திருவிழாவை ஆரம்பிச்சிட்டாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு, ஷூட்டிங் இறுதி நாள் என எதற்கெடுத்தாலும் திருவிழா நடத்துவது விஜய் வழக்கம். இப்போதும் அதைத் தொடர்கிறார்.

அவருக்கு அடுத்து அஜீத். இவர் பிரியாணியை தன் கையால் சமைத்தே விருந்து வைத்து விடுவார். விட்டால் ஊட்டியே விட்டார் என்று சொல்லும் அளவுக்கு இவரது பிரியாணி விருந்து பற்றி சில சினிமா செய்தியாளர்கள் கதை கதையாய் அடித்துவிடுவார்கள். படிப்பவர்கள் 'புளுகாதே புலவா' என கமெண்ட் அடித்துவிட்டுக் கடப்பார்கள்.

Jiiva's Biriyani treat

இவர்கள் லிஸ்டில் இப்போது ஜீவாவும் சேர்ந்துவிட்டார் போலிருக்கிறது. அதாவது பிரியாணி போடும் விஷயத்தில்...

போக்கிரி ராஜா படத்தின் ஷூட்டிங்கின்போது தன் பிறந்த நாளைக் கொண்டாடிய குழுவினர் 200 பேருக்கு பிரியாணி விருந்து அளித்து மகிழ்வித்தாராம் ஜீவா.

முன்னதாக ஜீவா பிறந்த நாளன்று போக்கிரி ராஜா படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வரவழைத்து ஹன்சிகா மற்றும் கலைஞர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். அன்று பிற்பகலே படக்குழுவில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கினார் ஜீவா.

இவ்விழாவில் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், நடன இயக்குனர் பிருந்தா, ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் உடன் இருந்தனர்.

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகிறது போக்கிரி ராஜா.

English summary
Actor Jiiva has served delicious biriyani to his Pokiri Raja crew on his birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil