»   »  ஓமைகாட்: காதல் மனைவியை விவாகரத்து செய்யும் நடிகர் ஜான் ஆபிரகாம்?

ஓமைகாட்: காதல் மனைவியை விவாகரத்து செய்யும் நடிகர் ஜான் ஆபிரகாம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமும், அவரது காதல் மனைவி பிரியா ருன்சாலும் விவாகரத்து செய்யப் போவதாக கூறப்படுகிறது.

மாடலிங் செய்து வந்த ஜான் ஆபிரகாம் பாலிவுட்டில் நடிகர் ஆனார். நெடு நெடுவென வளர்ந்திருக்கும் அவரின் கன்னக்குழிக்கே பாலிவுட்டில் பல ரசிகைகள் உள்ளனர். அவருக்கு நடிகை பிபாஷா பாசுவை மாடலிங் செய்யும் காலத்தில் இருந்தே தெரியும்.

அவர்களின் நட்பு காதலானது. பாலிவுட்டின் அழகிய ஜோடியாக வலம் வந்தனர்.

காதல் முறிவு

காதல் முறிவு

9 ஆண்டுகள் காதல் ஜோடியாக இருந்த ஜான் ஆபிரகாமும், பிபாஷா பாசுவும் திடீர் என பிரிந்துவிட்டனர். அதன் பிறகு பிபாஷா ஜானுக்கு வயதாகிவிட்டது அவர் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது நல்லது என்று நக்கலாக கூறினார்.

பிரியா

பிரியா

பிபாஷாவை பிரிந்த ஜான் ஆபிரகாம் வாழ்வில் வங்கியில் வேலை பார்க்கும் பிரியா ருன்சால் வந்தார். அவர்களின் நட்பு காதலாகி திருமணம் வரை வந்தது. ஜான் பிரியாவை காதும் காதும் வைத்தது போன்று திருமணம் செய்து கொண்டார்.

பிசி

பிசி

திருமணத்திற்கு பிறகு ஜான் தனது பட வேலைகளிலும், பிரியா தனது அலுவலக வேலையிலும் பிசியாகிவிட்டனர். இதனால் அவர்களுக்கு முகம் கொடுத்து பேசக் கூட நேரம் இல்லாமல் போனது.

விரிசல்

விரிசல்

ஜான் ஆபிரகாம், பிரியா இடையேயான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதே இல்லையாம். அவர்கள் விவாகரத்து பெறப் போவதாகவும் பாலிவுட்டில் பேசப்படுகிறது.

வெல்கம் பேக்

வெல்கம் பேக்

ஜான் ஆபிரகாம் நடித்துள்ள வெல்கம் பேக் படத்தின் நிகழ்ச்சியில் படம் பற்றி உங்கள் மனைவி என்ன நினைக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

English summary
Buzz is that Bollywood hunk John Abraham and his wife Priya Runchal are heading towards divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil