»   »  யாரை பாராட்டுவதுன்னே தெரியலையே: ஜோக்கரை பார்த்து கண்ணீர்விட்ட தனுஷ்

யாரை பாராட்டுவதுன்னே தெரியலையே: ஜோக்கரை பார்த்து கண்ணீர்விட்ட தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோக்கர் படத்தை பார்த்த தனுஷ் கண்ணீர் விட்டுள்ளார். மேலும் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

ராஜுமுருகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ஜோக்கர். அரசியல் சாட்டையடி, வேடிக்கை மனிதர்களுக்கு ஒரு செருப்படி என்று ஜோக்கர் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.

Joker makes Dhanush shed tears

கதை தான் ஹீரோ. ஜிம் பாடி ஹீரோ இல்லை, நா. முத்துக்குமார் எழுதியது போன்று அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்பது போன்ற நடிகை. இருப்பினும் படத்தை கொண்டாட ரசிகர்கள் தவறவில்லை.

இந்நிலையில் தான் தனுஷ் ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

#joker - யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள்

English summary
Dhanush watched Raju Murugan's Joker and couldn't control his tears. He even insistes that everyone should watch this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil