ஜுனியர் என்டிஆர்.,க்கு மைனர் ஆப்பரேஷன்...ஏன் என்னாச்சு ?

ஐதராபாத் : கடந்த மாதம் முதல் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த டாப் நடிகர்கள் பலருக்கும் அடுத்தடுத்து ஆப்பரேஷன் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்களின் ஃபேவரைட் நடிகர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு வலது கையில் சர்ஜரி செய்யப்பட்டது. நரம்பு பிரச்சனை காரணமாக அவருக்கு ஆப்பரேஷன் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக ஆப்பரேஷன் செய்யப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினி, தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

பாலகிருஷ்ணாவிற்கு சர்ஜரி

பாலகிருஷ்ணாவிற்கு சர்ஜரி

ரஜினியை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கும் சர்ஜரி செய்யப்பட்டது. அவருக்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்ஜரி செய்யப்பட்டது. இவர்கள் மூன்று பேருக்கும் கடந்த மாதம் சர்ஜரி நடைபெற்றது.

ஜுனியர் என்டிஆருக்கு ஆப்பரேஷன்

ஜுனியர் என்டிஆருக்கு ஆப்பரேஷன்

இந்நிலையில் லேட்டஸ்ட்டாக தெலுங்கு சூப்பர் ஹீரோ ஜுனியர் என்டிஆருக்கு தற்போது மைனர் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளதாம். வலது கை விரலில் அவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவிற்காக அவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளதாம்.

இப்படி தான் காயம் ஏற்பட்டதா

இப்படி தான் காயம் ஏற்பட்டதா

சமீபத்தில் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த போது ஜுனியர் என்டிஆருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிய ஆப்பரேஷன் நடத்தப்பட்டு, அதற்கு பிறகு அவர் நலருடன் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் ஜுனியர் என்டிஆர் ஓய்வில் இருக்கிறாராம்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

ஜுனியர் என்டிஆர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். சோஷியல் மீடியாக்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. திரை பிரபலங்கள் பலரும் ஜுனியர் என்டிஆர் விரைவில் குணமடைந்து, வழக்கமான பணிகளுக்கு திரும்ப வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ஆர்ஆர் ரிலீஸ்

ஆர்ஆர்ஆர் ரிலீஸ்

ஜுனியர் என்டிஆர் நடித்து முடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஜுனியர் என்டிஆர் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் இந்த படத்தின் 45 செகண்ட் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜுனியர் என்டிஆருடன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தரக் ஷுட்டிங் எப்போது

தரக் ஷுட்டிங் எப்போது

படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படாமல் இருந்தால் டிசம்பரில் ப்ரோமோஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளது. கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் படிக்கும் தரக் படம் 2021 ம் ஆண்டு இறுதியில் அல்லது 2022 ம் ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X