»   »  சிரஞ்சீவி 150வது படம்: 60வது பிறந்தநாளில் அரிதாரம் பூச தயார்

சிரஞ்சீவி 150வது படம்: 60வது பிறந்தநாளில் அரிதாரம் பூச தயார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவி தனது 150 வது படத்திற்காக மீண்டும் மேக் அப் போட தயாராகிவிட்டார். இந்தப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவியின் 60வது பிறந்தநாளில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 149 படங்கள் நடித்துள்ளார். இந்த படம் சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் இதை மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதில் சிரஞ்சீவி மிகுந்த முயற்சி எடுத்து வருகிறார்.அவரது 150 -வது படம் எதுவாக இருக்கும் என்பதை அறிய கடந்த சில வருடங்களாக ஆர்வம் மேலிட காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் வாழ்க்கை

தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டராக திகழ்ந்த நடிகர் சிரஞ்சீவி, 2008 ஆண்டு திரையுலகில் இருந்து விலகி பிரஜாராஜ்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வென்ற அவர், 2011ஆம் ஆண்டு தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

அமைச்சரான சிரஞ்சீவி

அமைச்சரான சிரஞ்சீவி

ராஜ்யசபா உறுப்பினராகி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.தற்போது அரசியல் வாழ்க்கை போரடிக்கவே மீண்டும் திரையுலகிற்கே திரும்ப முடிவு செய்து 150வது படத்தில் நடிக்கப் போகிறார்.

பரிசு அறிவிப்பு

பரிசு அறிவிப்பு

தனக்குப் பிடித்த கதையை யார் தருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தரப்படும் என அறிவித்தார். அப்படியும் சரியான கதை கிடைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, சிரஞ்சீவியின் 150 வது படத்தை யார் இயக்குவார் என்று தனி பட்டிமன்றம் நடந்தது.

பூரி ஜெகன்நாத்

பூரி ஜெகன்நாத்

சிரஞ்சீவியே இயக்கலாம். அவரது பிரஜ்ஜா ராஜ்ஜியத்தைவிட அது மோசமானதாக இருக்காது என்று நய்யாண்டி செய்தார் ராம் கோபால் வர்மா. கடைசியில் இயக்குனர் யார் என்பது தெரிந்துள்ளது. வர்மாவின் பாசத்துக்குரிய சிஷ்யர், பூரி ஜென்நாத்.

சன்னிலியோன்

சன்னிலியோன்

இந்த படத்தில் ஐட்டம் நடனம் ஆட பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சன்னி லியோன் ஏற்கனவே தமிழில் வடகறி படத்திலும், தெலுங்கில் கரண்ட் தேகா" என்ற படத்திலும் ஐட்டம் நடனம் ஆடியுள்ளார். அதுபோலவே சிரஞ்சீவியுடனும் அவர் நடனம் ஆடுவது உறுதி என்று தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

இந்த படத்தில் ராஜசேகர், மோகன்பாபு, மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர்களை கெளரவ வேடத்தில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

60வது பிறந்தநாளில்

60வது பிறந்தநாளில்

சிரஞ்சீவியின் 60 வது பிறந்தநாளான ஆகஸ்ட் 22 ம் தேதி 150வது படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றனர். இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார்.

English summary
Actor-turned-politician K. Chiranjeevi is set to don the greasepaint after seven years as the superstar has decided to launch his 150th film. Puri Jagannadh will direct the film to be launched on the actor’s 60th birthday on August 22.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil